Orient FD Plus: ஆயுள் காப்புறுதி மற்றும் தீவிர நோய் பாதுகாப்புடன் கூடிய விசேட நிலையான வைப்புத் திட்டம்

ஜனசக்தி குழுமத்தின் உறுப்பு நிறுவனமும் முன்னணி நிதிச் சேவை வழங்குனருமான Orient Finance PLC, ஒரு விசேட நிலையான வைப்புத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இது ஆயுள் காப்புறுதி மற்றும் தீவிர நோய்க்கான பாதுகாப்புடனான நிலையான வைப்பீட்டு வசதியை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதி நன்மைகளை சமூகத்திற்கு அறியப்படுத்துவதற்கும், அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நிறுவனத்தின் விற்பனைக் குழு மேற்கொண்டிருந்தது. இந்த புதுமையான நிதித் தீர்வானது, நிதி நிலையானதன்மை மற்றும் மேம்பட்ட வாழ்க்கை பாதுகாப்பை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளவும் முடியுமானதாக காணப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு அமர்வுகளின் போது, ​​வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் நன்மைகள் தொடர்பில் விவாதிக்கவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த முதலீட்டுத் திட்டத்தைத் தனிப்பயனாக்கம் வாய்ப்பு வழங்கப்பட்டது. நிலையான வைப்புத்தொகையின் மொத்த மதிப்பின் அடிப்படையில் திட்டத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படும் அதே வேளையில், தகுதிவாய்ந்த கணக்கு வைத்திருப்பவர்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணை வர்த்தகநாம காப்புறுதி அட்டையையும் பெறுவார்கள்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் குறித்து, ஓரியண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கே.எம்.எம். ஜாபிர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சவாலான காலத்தில் எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த விசேட திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். Orient FD Plus என்பது, ஒரு வகையான நிலையான வைப்புத் திட்டமாகும் என்பதுடன், இது ஒரு உத்தரவாதமான ஆயுள் காப்புறுதியையும் தீவிர நோய்ப் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இந்த நிலையான வைப்புத் திட்டத்தில், சந்தையின் ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொள்ளாது, எமது வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய சந்தை சூழ்நிலையில் நஷ்டத்தை சந்திக்காமல் பாதுகாக்கும் வகையிலான உத்தரவாதமான முதலீட்டு வருமான திட்டத்தை நாம் வழங்குகிறோம்.” என்றார்.

Orient Finance PLC ஆனது, வைப்பீடுகள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை, வாடகை கொள்வனவு, அடமானக் கடன்கள், அடகு வைத்தல், பெருநிறுவன நிதியுதவி, Factoring, Margin Trading, Working Capital உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகிறது. உயர்தர நிறுவனங்கள் முதல் வழக்கமான மற்றும் நிலையான வருமானத்துடன் வளர்ச்சியடையும் தொழில்முனைவோர் வரையான வாடிக்கையாளர்களை நிறுவனம் கொண்டுள்ளது. இந்த புத்தாக்கம் கொண்ட நிலையான வைப்புத் திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, அருகில் உள்ள Orient Finance PLC கிளை அல்லது வாடிக்கையாளர் சேவை தொலைபேசி +94 (0) 11 757 7577 மூலம் பெறலாம்.

END

Photo caption:

Orient Finance தலைமை அலுவலகத்தில் விற்பனைக் குழுவின் பிரதிநிதிகள்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *