சிங்கர் ஃபெஷன் அக்கடமி தனது மாணவர்களுக்கு பட்டப்படிப்பை வழங்குவதற்காக இந்தியாவின் Lovely Professional University (LPU) பல்கலைக்கழகத்துடன் ஏற்படுத்தியுள்ள தனது கூட்டாண்மை தொடர்பில் அறிவித்துள்ளது. சிங்கர் ஃபெஷன் அக்கடமி மாணவர்கள், சிங்கர் ஃபெஷன் அக்கடமியில் இரண்டரை வருட கால நவநாகரிக ஆடை வடிவமைப்பு கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் LPU இடமிருந்து நவநாகரிக ஆடை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர இந்த கூட்டாண்மை இடமளிக்கும்.
இத்துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள சிங்கர் ஃபெஷன் அக்கடமியானது தையல் மற்றும் நவநாகரிக ஆடை வடிவமைப்பில் எண்ணுக்கணக்கற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பட்டய ஆடை வடிவமைப்பாளர் சங்கத்திடமிருந்து (Chartered Society of Designers – CSD) கற்கைநெறி உறுதிப்படுத்தல் அங்கீகார அந்தஸ்தை இந்நாட்டில் முதன்முதலாகப் பெற்ற மற்றும் ஒரேயொரு நிறுவனம் இந்த அக்கடமி ஆகும். அதாவது, Certificate in Fashion Design, Diploma In fashion Designing, Advance diploma in fashion Designing, Diploma in Drees Making மற்றும் Diploma in Machine Embroidery போன்ற கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்கள், சிங்கர் ஃபெஷன் அக்கடமியால் வழங்கப்படும் சான்றிதழுக்குப் புறம்பாக, CSD இடமிருந்து உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழைப் பெற்றுக்கொள்வார்கள்.
தொழில்துறையின் சந்தைப் போக்குகள் மற்றும் விசேட நிபுணத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து, சிங்கர் ஃபெஷன் அக்கடமியானது, மாணவர்களுக்கு மதிப்புமிக்க தொழில்துறை சார்ந்த சான்று அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் எண்ணமே Lovely Professional University பல்கலைக்கழகத்துடன் ஒரு சிறந்த கூட்டாண்மையை ஏற்படுத்துவதைத் தூண்டியது. LPU ஆனது இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்று என்பதுடன், இது நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. உயர்தர கல்வி மற்றும் மாணவர் ஆதரவை வழங்குவதற்கான அர்ப்பணிப்புக்காக ஏராளமான விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளதால், LPU ஆனது நவநாகரிக ஆடை வடிவமைப்பில் கல்வியை மேற்கொள்வதற்கான சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் அதிநவீன வசதிகள், ஆராய்ச்சி திறன்கள் மற்றும் மதிப்புமிக்க தொழில் துறை கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இந்தத் கற்கைநெறித் திட்டத்தை மதிப்புமிக்க முதலீடாக மாற்றுகின்றன.
சிங்கர் ஃபெஷன் அக்கடமியானது 29 வெவ்வேறு கற்கைநெறிகளை வழங்குகிறது. இதில் மூன்று டிப்ளோமா கற்கைநெறிகள், ஒரு மேல் டிப்ளோமா கற்கைநெறி, 6 சான்றிதழ் கற்கைநெறிகள் மற்றும் 20 குறும் கற்கைநெறிகள் ஆகியவை மிகவும் கட்டுபடியான கட்டணங்களில் வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் 54 இடங்களில் அமைந்துள்ள சிங்கர் ஃபெஷன் அக்கடமிகள் மூலமாகவும், நிகழ்நிலை (இணைய) வகுப்புகள் மூலமாகவும் கற்கைநெறிகள் வழங்கப்படுகின்றன. இது மாணவர்களுக்கு அதிக சௌகரியத்திற்கு இடமளிக்கிறது. Lovely Professional University உடனான கூட்டாண்மையானது, மாணவர்களுக்கு நவநாகரிக ஆடை வடிவமைப்பில் விரிவான கல்வியை வழங்கும் சிங்கர் ஃபெஷன் அக்கடமியின் முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.