செயல்பாட்டு விசேடத்துவத்திற்காக NCQP விருது விழாவில் 21 வெற்றிகளை பதிவு செய்த Hemas

தரம் மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் (SLAAQP) ஏற்பாடு செய்திருந்த, 2023 தரம் மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான தேசிய மாநாடு (NCQP) விருது விழாவில், Hemas Consumer Brands மிகப் பெரும் வெற்றியாளராக வெளிப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வானது, ‘புத்தாக்கமான தரமான தீர்வுகள் மூலம் நிலைபேறான வளர்ச்சி’ எனும் கருப்பொருளின் கீழ், உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் தரம் மற்றும் உற்பத்தித்திறனில் சிறந்த சாதனைகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டமைந்தது.

Cross Functional Teams (CFT) இனது ஒரு பகுதி எனும் வகையில், தொடர்ச்சியான மேம்பாடு எனும் பிரிவில் போட்டியிட்ட Hemas Consumer Brands நிறுவனம், மிகச் சிறந்த 25 விருதுகளை பெற்றது. நிறுவனம் 15 தங்க விருதுகள், 7 வெள்ளி விருதுகள், 3 வெண்கல விருதுகளை இதில் வென்றது. Lean Journey எனும் அனைத்தையும் சிறப்பாக செயற்படச் செய்யும் முறை மூலம், தரம் மற்றும் உற்பத்தித்திறன் மீதான நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்தியுள்ளது. ‘முட்டாள்தனமான’ (‘Fool-proof’) தர அமைப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதில் கவனம் செலுத்துவதன் மூலம், தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் தத்துவத்தின் மூலம், Hemas வர்த்தகநிலைய தளத்தில் உள்ள குழுக்களுக்கு, தற்போது காணப்படும் நிலைமையை சவாலாக ஏற்பதன் மூலம் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், விஞ்ஞான கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கும் நிறுவனம் அதிகாரம் அளித்துள்ளது.

இலங்கையில், NCQP விருதுகளானவை, நிர்வாக நிலையில் அல்லாத ஊழியர்களை அங்கீகரிப்பதற்காக பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள, உள்நாட்டிலுள்ள ஒரேயொரு பாராட்டு நிகழ்வாகும். அந்த வகையில் இவ்வருடத்தில் பல்வேறு பிரிவுகளில் 400 அணிகள் விருதுகளுக்காக பங்கேற்றிருந்தன. NCQP விருதுகளானவை, செயற்பாட்டு விசேடத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி சிறந்த நடைமுறைகளை செயல்படுத்த ஊழியர்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இதில் வெற்றியாளர்களில் ஒருவராக இருப்பதில் Hemas பெருமிதம் கொள்கிறது. கடந்த 12 மாதங்களில், 100 அணிகளுடன் ஒரு உள்ளக நிறுவன போட்டியை Hemas நடத்தியிருந்தது. அந்த வகையில் நிர்வாக நிலையில் அல்லாத ஊழியர்களை உள்ளடக்கிய முதலிடத்திலிருந்த 25 அணிகள் NCQP விருதுகளில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றன.

Hemas Consumer Brands நிறுவனத்தின் உற்பத்திப் பணிப்பாளர் விராஜ் ஜயசூரிய, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி தொடர்பில் தனது பாராட்டுகளை தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நாம் வழங்கும் மிகப் பாரிய அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகின்ற, செயற்பாட்டு விசேடத்துவத்திற்கான இந்த அங்கீகாரம் தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். இந்த வருடத்தின் சாதனையானது, விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. அத்துடன் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய எமது மதிப்புமிக்க ஊழியர்களின் உற்சாகம் மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நாம் பெருமை கொள்கிறோம்,

Hemas Consumer Brands அதன் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் நிலைபேறன தரமான தீர்வுகளை வழங்குவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ள அதே நேரத்தில், நிறுவனத்திற்கான வளர்ச்சி மற்றும் இலாபமீட்டுவதையும் தொடர்கிறது. செயற்பாட்டில் சிறந்து விளங்குவதற்காக நாம் பாடுபடுவதன் காரணமாக, எமது முக்கிய மதிப்புகளுக்கான எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது, தொடர்ந்தும் எமக்கு வழிகாட்டும். அதற்கமைய, எதிர்காலத்தை எதிர்நோக்குகியவாறு, இந்தப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நாம் உற்சாகமாக உள்ளோம்.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *