ANC இனால் வலுவூட்டப்படும் FreeBuds 4i மற்றும் புதிய உடற்தகுதி பங்காளரான Band 6 இனையும் இலங்கையில் வெளியிட்ட Huawei

புத்தாக்கத்தின் மறுபெயரும், முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குனருமான Huawei, Huawei FreeBuds 4i மற்றும் Huawei Band 6 ஆகிய இரு தயாரிப்புகளை இலங்கையில் வெளியிட்டதன் மூலம் தனது ஆர்வத்தைத் தூண்டும் அணியும் தொழில்நுட்ப மற்றும் வயர்லெஸ் இயர்போன்ஸ் வரிசையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Huawei FreeBuds 4i மற்றும் Huawei Band 6 ஆகிய Huawei நிறுவனத்தின் ஓடியோ மற்றும் உடற்தகுதி தீர்வுகள், பல ஆண்டுகளாக தொழில்நுட்ப ஆர்வலர்களின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதுடன், இப்போது இரண்டு புதிய தயாரிப்புகளும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேம்பாடுகளுடன் 2021 ஆம் ஆண்டின் முதற்தர தெரிவுகளாக அமையவுள்ளன.

Huawei இன் அண்மைய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ், Active Noise Cancellation (ANC) தொழில்நுட்பத்தால் வலுவூட்டப்படுவதுடன், ஒரு சிறந்த ஒலி அனுபவத்தை வழங்க உதவுகிறது. இதன் அறிவார்ந்த சென்சர்கள் சுற்றுப்புற சத்தத்தைக் கண்டறிந்து குறைக்க வல்லவை என்பதனால் பாவனையாளர் எங்கிருந்தாலும் இசை அல்லது அழைப்புகளில் கவனம் செலுத்த முடியும். இந்த ANC பயன்முறையானது ஷொப்பிங் மோல்கள், வீதிகள் போன்ற இரைச்சல் மிகுந்த சூழ்நிலைகளுக்கும், பஸ் அல்லது ரயிலில் பயணிக்கும்போதும் சிறந்தது. அதன் இரட்டை மைக் அமைப்பு மிகவும் தெளிவான அழைப்புகளை உறுதிசெய்வதுடன், நீங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்க முடிவதுடன், நீங்கள் பேசுவதும் சத்தமாக கேட்கும்.

Huawei FreeBuds 4i இன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, ஒரே சார்ஜில் 10 மணிநேர தொடர்ச்சியான இசையை வழங்கும் திறன் ஆகும். தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் quick charge தொழில்நுட்பம் காரணமாக வெறும் 10 நிமிட சார்ஜில் 4 மணிநேர இசையை ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Huawei இன் அணியும் தொழில்நுட்ப சாதனங்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ள Huawei Band 6, ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட, இலகு எடை கொண்ட, பல்வேறு செயற்பாடுகளுக்கு ஏற்ற ஆகும். முழுக்காட்சி திரையைக் கொண்ட இது தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Huawei Band 6 என்பது 1.47 அங்குல AMOLED முழுகாட்சி திரையுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்கிறது. இது smart bands களில் மிக அரிதாகவே காணப்படுகிறது. 148% பெரிய viewing area, குறைந்த bezels, உடன் கூடிய Huawei Band 6 மணிக்கட்டில் அணிந்து பார்ப்பதே பெரு மகிழ்ச்சியாகும். ஒரு பெரிய மற்றும் சிறந்த திரை என்பது புள்ளிவிவரங்கள் மற்றும் தரவை வியக்கவைக்கும் விவரங்களுடன் பார்க்க முடியும், அதேநேரத்தில் சாதனத்தின் அம்சங்களை வசதியான 4-வழி தொடுகை கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் பயன்படுத்த முடியும். மேலும் இது நான்கு வெவ்வேறு strap வண்ணங்களில் கிடைக்கிறது: Graphite Black, Forest Green, Amber Sunrise மற்றும் Sakura Pink.

புதிய உடல்நலம் மற்றும் உடற்தகுதி துணையான,  Huawei Band 6 ஒரு உள்ளமைக்கப்பட்ட SpO2 கண்டறிதல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது இரத்த ஒட்சிசன் செறிவூட்டலை தானாகவே 24/7 கண்காணிக்கும் மற்றும் ஒட்சிசன் செறிவு நிலை மிகக் குறைவாக இருக்கும்போது அறிவிப்புகளை வழங்குவதால் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. அதன் பற்றரி ஆயுளானது இன்றைய இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாகும். இது சாதாரண பாவனையில் 14 நாட்கள் வரையும், அதிக பாவனையின் போது 10 நாட்கள் வரையும் நீடிக்கும் மின்கல ஆயுளையும் வழங்குகின்றது. உண்மையில், 5 நிமிட சார்ஜானது 2 நாட்களுக்கு  Band இனைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. Band 6 ஒரு உடற்தகுதி டிரக்கர் மட்டுமல்ல, உள்வரும் அழைப்புகள், செய்திகள், வானிலை அப்டேட்கள் போன்ற முக்கியமான அறிவிப்புகளுடன் இது உங்களை எழுப்புவதுடன்,  எளிய  தொடுதல்களின் மூலம் இசையை கட்டுப்படுத்தவும் ஸ்மார்ட்போனின் கெமரா மூலம் புகைப்படங்களை எடுக்கவும் கூடியது.

ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும்போது Huawei FreeBuds 4i மற்றும் Huawei Band 6 கலவையானது உகந்த பாவனையாளர் அனுபவத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் நாளினை பொழுதுபோக்குகளால் நிரப்புவதுடன், அன்றாட பணிகளில் வசதியாக கலந்துகொண்டு ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. அந்த வகையில், Huawei FreeBuds 4i  மற்றும் Huawei Band 6ஆகியவை டிஜிட்டல் வாசிகளிடம் கட்டாயம் இருக்க வேண்டிய இரண்டு சாதனங்களாகும்.

Huawei FreeBuds 4i, ரூபா 20,999 என்ற விலையிலும், Huawei Band 6 ரூபா 15,999 என்ற விலையிலும், Huawei experience centers, Singer காட்சியறைகளிலும் கிடைப்பதுடன், Singer.lk and Daraz.lk ஆகிய இணையத்தளங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *