CA Sri Lanka வின் TAGS விருதுகள் 2022 இல் தங்க விருதை வென்ற ஜனசக்தி லைஃப்

இலங்கையிலுள்ள முன்னோடியான ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப் (Janashakthi Life), இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (Chartered Accountants Sri Lanka) ஏற்பாடு செய்திருந்த CA Sri Lanka’s TAGS விருதுகள் 2022 இல் காப்புறுதிப் பிரிவில் உயரிய தங்க விருதை வென்றுள்ளது.

இந்தச் சாதனை குறித்து ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “மதிப்புமிக்க CA Sri Lanka’s TAGS விருதுகள் விழாவில் கௌரவிக்கப்பட்டதையிட்டு நாம் பெருமையடைகிறோம். காப்புறுதித் துறையில், சந்தையில் சவால் விடுக்கும் விருது பெற்ற நிறுவனம் எனும் வகையில் எமது நிறுவன நிலைப்பாட்டை இந்த விருது மேலும் வலுப்படுத்துகிறது. ஜனசக்தி லைஃப் இனை பிரதிநிதித்துவப்படுத்தும் வலுவான கொள்கைகள், வெளிப்படைத்தன்மை, நிர்வாகம், விழுமியங்கள் ஆகியவற்றுக்கு இந்த சாதனை ஒரு சான்றாகும். எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் பொருத்தமான, துல்லியமான மற்றும் தகவல் நிறைந்த வருடாந்த அறிக்கையை வழங்குவதன் மூலம், நாம் தொடர்ச்சியாக சிறந்து விளங்க முயற்சிப்பதன் அடிப்படையில், இது எமது குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்பதால், எமது குழுவிற்கு இவ்வேளையில் நான் வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.

வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல் ஆகிய தனது கூட்டாண்மை நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, ஜனசக்தி லைஃப் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நெறிமுறை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் அதிக மதிப்பை வழங்க எப்போதும் பாடுபடுகிறது. ஒரு காப்புறுதி வழங்குனர் எனும் வகையில், வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் இது உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்த நோக்கத்தை, தனது ஊழியர்களுடனான தனது ஈடுபாட்டிற்கு விரிவுபடுத்தும் வகையில், ஜனசக்தி லைஃப் எப்போதும் அதன் ஊழியர்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்த்துக்கொள்ளவும், அதனை நனவாக்கவும் உதவுகின்ற, அவர்களுக்கு உச்ச ஆதரவை வழங்குகின்ற பணிச்சூழலை வழங்க முயற்சி செய்து வருகிறது.

ஜனசக்தி லைஃப் அதன் வரலாற்றில் முதன்முறையாக ‘Best Life Insurer Sri Lanka 2022’ (2022ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனம்) என சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Capital Finance International (CFI.co) அமைப்பினால் வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க அங்கீகாரமானது, பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்குகின்றதும், அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பு சேர்க்கின்றதுமான நிறுவனங்களை அடையாளம் காட்டுகிறது. 2022 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த வர்த்தகநாம மதிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்ததன் மூலம், இந்த வர்த்தகநாமமானது ‘TOP 10 Fastest Growing Sri Lankan Brands’ (அதிவேகமாக வளர்ந்து வரும் இலங்கை வர்த்தகநாமங்களில் முதல் 10 இடங்களில்) ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, TOP 10 (முதல் 10 இடம்) எனும் கௌரவப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரேயொரு காப்புறுதி வர்த்தகநாமமாகவும் இது விளங்குகின்றது.

இம்முன்னணி காப்புறுதி நிறுவனமானது 3ஆவது ICC Emerging Asia Insurance Awards 2021 (ஐசிசி வளர்ந்துவரும் ஆசிய காப்புறுதி விருதுகள் 2021) இல், 2021 ஆம் ஆண்டிற்கான ‘Best Strategies for Insurance Spreading’ (காப்புறுதி பரவலுக்கான சிறந்த மூலோபாயங்கள்’ விருதை இம்முன்னணி காப்புறுதி நிறுவனம் வென்றுள்ளது. இப்பிராந்தியத்தில் காப்புறுதித் தொழில்துறைகளை, தொழில்துறையின் சிறந்த தீர்வுகளுடன் மாற்றியமைப்பதில் அதன் பங்களிப்பை அங்கீகரிப்பதாக இது அமைகிறது. அத்துடன், ஜனசக்தி லைஃப் ஆனது, ‘Domestic Insurer of the Year’ (வருடத்தின் உள்நாட்டு காப்புறுதி நிறுவனம்) ஆக உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, ஜனசக்தி லைஃப் கையடக்கத் தொலைபேசி செயலியானது, Insurance Asia Awards 2022 யில் ‘Mobile App of the Year’ (வருடத்தின் சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலி) எனும் விருதை பெற்றுள்ளது. இந்த சான்றானது மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவதோடு, காப்புறுதித் துறையில் மிக அங்கீகாரம் கொண்ட இவ்விருது வழங்கும் செயன்முறையானது மிகக் கடுமையான ஆராய்வு மற்றும் தெரிவு செய்யும் செயன்முறை ஆகியவறை கொண்டுள்ளது.

தனது 28 வருடத்திற்கும் அதிக பயணத்தில், Janashakthi Life PLC ஆனது, காப்புறுதித் துறையில் தொடர்ந்தும் புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக முன்னோக்கி பயணித்தும் வருகின்றது. அதன் நாடளாவிய ரீதியிலான 75 இற்கும் அதிக கிளைகளைக் கொண்ட வலையமைப்பானது, அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் தனித்துவமான காப்புறுதி தீர்வுகளை அணுக வழிவகுக்கிறது.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *