Clogard அறிமுகப்படுத்தும் ‘க்ளோகார்ட் பஞ்ச சக்தி’ பல்வேறு நன்மைகளைக் கொண்ட புத்தம் புதிய பற்பசை

இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்ளோகார்ட், ‘க்ளோகார்ட் பஞ்ச சக்தி’ (Clogard Pancha Shakthi) எனும் பல்வேறு நன்மைகளைக் கொண்ட புத்தம் புதிய பற்பசையை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. உண்மையான இலங்கை வாய்ச்சுகாதார பராமரிப்பு தயாரிப்பான க்ளோகார்ட், பாவனையாளர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், Clogard Pancha Shakthi தயாரிப்பை வடிவமைத்துள்ளது. பல்வேறு நன்மைகளுடன் அனைத்து வயதினருக்கும் முழுமையான அனுபவத்தை வழங்குவதற்காக, உள்நாட்டு மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நன்மைபயக்கும் இயற்கை எண்ணெய்களினால் இது தயாரிக்கப்படுகின்றது. இதனால் பயனர்கள் தினமும் சிறந்த வாய்ச்சுகாதாரத்தை அனுபவிக்க முடியும். ‘பஞ்ச சக்தி’ என்பது சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதாவது ‘ஐவகை சக்தி’ என்பதே இதன் நேரடி அர்த்தமாக இருந்த போதிலும் இத்தயாரிப்பு வழங்கும் பலன்களின் எண்ணிக்கை மட்டிட முடியாததாகும்.

க்ளோகார்ட் பஞ்ச சக்தி ஆனது, இரிமேதாதி தைலத்தை கொண்டுள்ளது. இது ஆயுர்வேத / சுதேச மருத்துவ ரீதியாக வாய்ச்சுகாதார பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இரிமேதாதி எண்ணெயானது, இலங்கையிலுள்ள 23 வகை மூலிகைகளின் கலவையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அத்துடன் நுண்ணுயிர் எதிர்ப்பு, கிருமி கொல்லி, துர்வாடை நீக்கி, துவர்ப்பு பண்புகளைக் இது கொண்டுள்ளது. க்ளோகார்ட் பஞ்ச சக்தியானது, ஒரு பற்பசையிலிருந்து பாவனையாளர்களுக்கு அவசியமான பல்வேறு நன்மைகளை வழங்குவதற்காக, வடிவமைக்கப்பட்டுள்ளது.

பற்குழிகள், வெண்படைகளின் வளர்ச்சி, ஈறு தொடர்பான பிரச்சினைகள், வாய் துர்நாற்றம், பற்களின் நிறமாற்றம் போன்ற 5 முக்கிய வாய்ச்சுகாதார பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதே, க்ளோகார்ட் பஞ்ச சக்தியின் பிரதான நோக்கமாகும். இது வழங்கும் பல்வேறு நன்மைகளுக்கு மேலதிகமாக, க்ளோகார்ட் பஞ்ச சக்தியானது ஒரு காரமான, மூலிகை மருத்துவ சுவையையும் கொண்டுள்ளது. இது வாய்க்கு இனிமையானதும், புது வகையான உணர்வையும் வழங்குகிறது.

Clogard நிறுவன சிரேஷ்ட வர்த்தக நாம முகாமையாளர் ரமில பெனாண்டோ புதிய தயாரிப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “Clogard எப்போதும் இலங்கையிலுள்ள நுகர்வோரின் வாய்ச்சுகாதார பராமரிப்புத் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வுகளை வழங்கும் ஒரு வர்த்தக நாமமாக விளங்குகிறது. ஆரோக்கியம் தொடர்பில் நுகர்வோர் மிகுந்த அக்கறையுள்ளவர்களாக மாறி வருகிறார்கள் என்பதை எம்மால் அடையாளம் காண முடிகின்றது. வாய்ச்சுகாதாரம் மற்றும் பல் சுகாதாரத்தைப் பொறுத்தவரை, தங்கள் குடும்பங்களுக்கு அதிக உத்தரவாதத்தையும் மதிப்பையும் வழங்கும் பற்பசையை அவர்கள் தேடுகிறார்கள். வாய்ச்சுகாதார பராமரிப்பு பிரச்சினைகள், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடுகின்றது. அதற்கமைய, முழுக் குடும்பத்திற்கும் அனைத்து வகையான தீர்வுகளும் காணப்படுவது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டுதான் நாம் க்ளோகார்ட் பஞ்ச சக்தியை தற்போது அறிமுகப்படுத்துகிறோம். இது எமது வளர்ந்து வரும் தயாரிப்பு வகைகளில் சிறப்பு வாய்ந்த புது வரவாகும். இது முழுக் குடும்பத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும் அனைத்து அம்சங்களையும் கொண்ட பற்பசையாகும்.” என்றார்.

மூலிகை பற்பசை பிரிவுச் சந்தையானது மிகப் பரந்துபட்டதாகும். பல்வேறு பயன்களை வழங்கும் பிரிவானது அதன் இரண்டாவது பெரிய பிரிவாகும். இது காலத்துடன் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. சந்தையில் க்ளோகார்ட் பஞ்ச சக்தியின் வருகையின் மூலம், நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், ஒரு உள்நாட்டு பற்பசை வர்த்தகநாம எனும் வகையில் தனது வர்த்தகநாமத்தின் திறனை காண்பிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

க்ளோகார்ட் பஞ்ச சக்தி பற்பசை, ஹேமாஸ் இணைய வர்த்தக தளத்தில் கிடைக்கிறது:  https://hemasestore.com/brand/clogard/ அத்துடன், பலசரக்கு கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், ஃபேன்சி ஸ்டோர்கள், முன்னணி பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் அதனை கொள்வனவு செய்யலாம்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *