CMA Excellence in Integrated Reporting 2023 இல் CMA இனால் கௌரவிக்கப்பட்ட DIMO

இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் (CMA) ஏற்பாடு செய்திருந்த, CMA Excellence in Integrated Reporting 2023 விருதுகளில், ஒட்டுமொத்த தங்க விருதின் இணை வெற்றியாளராக, முன்னணி நிறுவனமான DIMO கௌரவிக்கப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 4 விருதுகளை நிறுவனம் பெற்றுள்ளது.

‘CMA Excellence in Integrated Reporting Awards 2023’, நிகழ்வானது, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. அங்கீகாரம் மிக்க இந்த நிகழ்வானது தொடர்ச்சியாக 9ஆவது வருடமாக இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது. இதில் உயர் விருதுக்கு மேலதிகமாக, ‘Top Ten Integrated Annual Reports’ (சிறந்த பத்து ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கைகள்) பிரிவிலும் DIMO கௌரவிக்கப்பட்டது. அத்துடன், ‘Special Award for Best Concise Annual Report’ (சிறந்த சுருக்கமான வருடாந்த அறிக்கைக்கான விசேட விருது) மற்றும் ‘Special Award for Best Integrated Thinking’ (சிறந்த ஒருங்கிணைந்த சிந்தனைக்கான விசேட விருது) ஆகியவற்றையும் நிறுவனம் வென்றுள்ளது.

நிறுவனத்தின் சாதனைகள் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்த, DIMO நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பண்டிதகே, “DIMO நிறுவனத்தில், ஒருங்கிணைந்த அறிக்கையிடலின் சக்தியானது, நம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு கருவி என நாம் நம்புகிறோம். இதன் மூலம் நாம் உருவாக்கும் முழுமையான மதிப்பை எமது பங்குதாரர்களுக்கு வெளிப்படுத்துகிறோம். அத்துடன் அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு வலுவூட்டுகிறோம். இந்த விருதானது பெருநிறுவன அறிக்கையிடலின் மிக உயர்ந்த தரத்தை பேணுவது தொடர்பான எமது அர்ப்பணிப்புக்கான ஒரு அங்கீகாரமாகும். இது எமது நிதிச் செயற்பாடுகளை மட்டுமின்றி, எமது சூழல், சமூகம், ஆளுகை (ESG) ஆகியன தொடர்பான எமது முயற்சிகளையும் எடுத்துக்காட்டுகின்றது.” என்றார்.

END

Image Caption: தங்க விருதைப் பெறும் DIMO குழுவினர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *