Daraz.lk மூலம் vivo V, Y தொடர் ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்து அற்புதமான பரிசுகள், வெகுமதிகளை வெல்லுங்கள்

vivo தனது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் விசேட பரிசுகளை வழங்கும் நோக்கில்இலங்கையின் முதலிடத்தில் உள்ள மிகப் பாரிய ஒன்லைன் சந்தையான Daraz.lk உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது

இலங்கைநவம்பர் XX, 2021: உலகளாவிய ரீதியில் ஸ்மார்ட்போன் தொழிற்துறையில் முன்னணியில் உள்ள vivo ஆனது, Daraz.lk உடன் இணைந்து Daraz இனது, மிகப்பாரிய நவம்பர் 11ஆம் திகதி விற்பனை நிகழ்வான ‘11.11’ நிகழ்வில் இணைந்துள்ளது. ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கடந்த 3 மாத கால கூட்டிணைவின் ஒரு அங்கமாக, V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு vivo மற்றும் Daraz ஆகியன தங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குதூகலமூட்டும் பரிசுகளை வழங்குகின்றன. இந்த கூட்டு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, நவம்பர் 11 முதல் நவம்பர் 17 வரையான 7 நாட்களுக்கு vivo ஸ்மார்ட்போன்கள் விசேட கழிவு விலையில் வழங்கப்படுகின்றது. இப்பிரசாரத்தின் போது, Daraz.lk இலிருந்து vivo தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், earbuds, earphones, pen drives, vivo T-shirts ஆகியவற்றை வெல்லும் வாய்ப்பை பெறுவதுடன், அவற்றின் விநியோக (shipping) சேவையை இலவசமாகப் பெற முடியும்.

இவ்விற்பனையின் போது கொள்வனவு செய்யக்கூடிய பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசும்போது, vivo இனது சமீபத்திய நேர்த்தியான, அழகிய V21 5G ஸ்மார்ட் போன் ஆனது 44MP OIS Night Selfie தொகுதியை கொண்டுள்ளது. V21e ஆனது, முற்புறமாக அமைந்த 44MP Eye Autofocus கெமராவை கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, Y1s, Y12s, Y20s மற்றும் சமீபத்திய 64MP பின்புற கெமரா, 5,000mAh மின்கலம், 33W Flash Charge வசதிகளைக் கொண்ட Y53s போன்ற Y தொடர் ஸ்மார்ட்போன்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம். அத்துடன் vivo Y1s ஆனது, சிறந்த பார்வையிடல் அனுபவத்திற்காக 6.22 அங்குல Halo Full View™ திரையைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மற்றும் நீண்ட நேர பயனர் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, vivo Y12s ஆனது 3GB RAM உடன் 5,000mAh சக்தி கொண்ட மின்கலத்தையும் கொண்டுள்ளது. vivo Y20s ஆனது, G80 Gaming Processor, 4GB RAM, 128GB ROM உடன் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ்விற்பனையில், ஒவ்வொரு வகையான பயனர்களுக்கும் அவரவர் விரும்பும் வகையிலான கையடக்கத் தொலைபேசிகள் உள்ளன.

அது மாத்திரமன்றி, முன்னணி கடனட்டைகள் மூலம் புதிய vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, பிரத்தியேகமான வவுச்சர்கள் மற்றும் இலகுவான வகையிலான பணம் செலுத்தும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகள் பற்றிய மேலதி விபரங்களுக்கு, https://click.daraz.lk/e/_7E4qH இற்கு அல்லது Daraz Mall இல் உள்ள vivo பிரத்தியேக கூடத்தை பார்வையிடவும் அல்லது vivo Sri Lanka இன் Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.

vivo பற்றி

vivo ஆனது, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த சேவைகளை மையமாகக் கொண்டு, வடிவமைப்பு சார்ந்த மதிப்பின் அடிப்படையில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் மனிதர்களுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமான படைப்பாற்றல் மூலமான வழிகளில் தொழில்நுட்பத்தையும் நவநாகரிகத்தையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான, புதிய போக்கினை உருவாக்கும் ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதன் மூலம் பாவனையாளர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைக்க vivo உறுதிபூண்டுள்ளது. Benfen*, வடிவமைப்பு சார்ந்த மதிப்பு, நுகர்வோர் சார்ந்த நிலை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் குழு மனப்பான்மை ஆகியவற்றை உள்ளடக்கிய நிறுவனத்தின் முக்கிய மதிப்புகளைப் பின்பற்றி, vivo ஒரு முன்னணி, நீண்டகால, உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக மாறுவதற்கான தனது தொலைநோக்கினை அடைய நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தை செயல்படுத்தியுள்ளது. 

சிறந்த உள்ளூர் திறமையாளர்களை ஒன்றிணைத்து மேம்படுத்தும் அதே வேளையில், vivo வின் தலைமையகம் சீனாவின் Dongguanஇல் அமைந்துள்ளதுடன் Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Xi’an, Taipei, Tokyo, San Diego ஆகிய இடங்களில் 10 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையங்கள் 5G, செயற்கை நுண்ணறிவு, புகைப்படவியல், வடிவமைப்பு மற்றும் பிற வளர்ந்து வரும் துறைகள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன. vivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் (வர்த்தகநாம அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி மையங்கள் உட்பட) 7 உற்பத்தி மையங்களை ஸ்தாபித்துள்ளது. இது ஒவ்வொரு வருடமும் 200 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை அது தயாரிக்கின்றது. தற்போதைய நிலையின் பிரகாரம், vivo அதன் விற்பனை வலையமைப்பை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உருவாக்கியுள்ளது, இது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை தன்வசம் கவர்ந்துள்ளது.

*“Benfen” என்பது சரியான விடயங்களைச் செய்வது மற்றும் விடயத்தை சரியாகச் செய்வது பற்றிய அணுகுமுறையை விபரிக்கும் ஒரு சொல்லாகும் – இது சமூகத்திற்கான மதிப்பை உருவாக்குவதற்கான vivo வின் செயற்பணியின் சிறந்த விளக்கமாகும். சமீபத்திய vivo தொடர்பான தகவல்களுக்கு: https://www.vivo.com/en/about-vivo/news

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *