FH Aachen பல்கலைக்கழகத்துடனான பங்குடமையின் மூலம் உள்நாட்டு மாணவர்களுக்கு 700+ ஜெர்மன் பட்டப்படிப்புகளுக்கான வாய்ப்பினை வழங்கும் DIMO

இலங்கையின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தனது DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தின் ஊடாக தொழிற்கல்வியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேன்மையுடன் திகழ்ந்து வரும் நிலையில், பிரயோக விஞ்ஞானத்துக்கான ஜேர்மனியின் முதற்தர பல்கலைக்கழகமான FH Aachen இன் உள்நாட்டு பிரதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மாணவர்கள் தற்போது FH Aachen இன் உலகப் புகழ்பெற்ற ஆரம்ப கற்கைகளில் இணைந்து கொள்ள முடியுமென்பதுடன், இதனூடாக ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இளமானி பட்டப்படிப்புகளை முன்னெடுக்க முடியும்.

இந்த புதிய முயற்சியின் மூலமாக DIMO நிறுவனமானது உள்ளூர் மாணவர்கள் FH Aachen University of Applied Sciences மற்றும் அதன் ஏனைய பங்காளர் பல்கலைக்கழகங்களான SRH Hamm, South Westphalia University of Applied Sciences, University of Duisburg Essen, HBK Essen University of Fine Arts  ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படும் பொறியியல், மருத்துவம், வணிகம் / பொருளாதாரம், கலை மற்றும் ஏனைய பல பட்டப்படிப்புகளை முன்னெடுக்க உதவுகின்றது.

இது தொடர்பில் DIMO நிறுவன தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்து தெரிவிக்கையில், “DATS இனால் அதன் தொடக்கத்திலிருந்தே இலங்கையில் தொழிற்பயிற்சி வெளியை மாற்ற முடிந்துள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தொழிற்பயிற்சியில் சிறந்து விளங்கும் DIMOவின் அடுத்த துணிச்சலான முயற்சியே இலங்கை இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வித் தகுதிக்கான வாய்ப்பை வழங்குவதாகும். இதன் மூலம் பட்டப்படிப்பு மட்டத்திலான உயர் கல்வியைத் தொடர விரும்புவோருக்கு, அதற்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அவர்களின் அறிவு மற்றும் தொழில்சார் வாழ்வினை மேம்படுத்த எதிர்பார்க்கின்றது,” என்றார்.

இந்த புதிய பங்குடமை மூலம், உள்ளூர் மாணவர்கள் தாம் விரும்பிய தொழில்சார் வாழ்க்கைப் பாதையை 700 க்கும் மேற்பட்ட இளமானி பட்டப்படிப்புகளில் இருந்து தெரிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அனைத்து பட்டப்படிப்புகளும் ஜெர்மனியில் நடாத்தப்படும் என்பதுடன் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புகளை ஆங்கிலத்தில் அல்லது ஜெர்மன் மொழியில் தொடர வாய்ப்பு கிடைக்கின்றது. ஆரம்ப ஸ்கிரீனிங் செயல்முறை மூலம் அவர்களின் தற்போதைய தகுதிகளை ஆராய்ந்து அவர்களின் இலட்சிய வாழ்க்கைப் பாதைக்கு ஏற்ற சரியான பட்டப்படிப்பைத் தெரிவு செய்ய DIMO உதவும். இந் நிறுவனமானது மாணவர்கள்  தேவையான ஆவணங்களுடன் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவும் தனித்தனியாக வழிகாட்டும்.

14,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆண்டுதோறும் சுமார் 2,000 பட்டதாரிகள், 10 பிரிவுகள், சுமார் 90 கற்கை நெறிகள், 11 உள் மற்றும் 5 இணைந்த கல்வியகங்கள் மற்றும் நான்கு திறன் தளங்களுடன், ஆகேன் மற்றும் ஜூவே ஆகிய இரண்டு இடங்களில் அமைந்துள்ள FH Aachen, ஜெர்மனியில் உள்ளக பாரிய, மிக முக்கியமான பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். FH Aachen அதன் மாணவர்களை நவீன மற்றும் எதிர்கால நோக்குடைய தொழில்கள் மற்றும் வெற்றிகரமான தொழிற்சார் வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் பட்டங்களை வழங்குகின்றது.

DIMO, 1939 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இலங்கை மக்களுக்கு ஜேர்மனியின் சிறந்த தயாரிப்புகளை வழங்கி வருகின்றது. 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட DIMO Academy for Technical Skills (DATS), Daimler AG Germany இன் ஒத்துழைப்புடன், தேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு உயர் தரத்திலான தொழிற்பயிற்சியை வழங்கி வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், ஜேர்மனால் சான்றளிக்கப்பட்ட தொழிற்துறை தகுதிகளை வழங்குவதற்காக இலங்கையில் உள்ள ஜெர்மன் தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுடன் DATS கோர்த்ததுடன், உள்ளூர் மாணவர்களுக்கு சர்வதேச தொழிற் சந்தைக்கான அணுகலை வழங்கியது. DATS ஏனைய துறைகளிலும் தகுதிகளை வழங்குவதன் மூலம் அதன் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. மிக அண்மையில், கட்டிட சேவைகள் துறையில் அதி நவீன கற்கை நெறியான Diploma in Plant Engineering இனை அறிமுகப்படுத்தியிருந்தது.

உலகில் சர்வதேச மாணவர்களிடையே நான்காவது மிகவும் பிரபலமான இடமாக ஜெர்மனி விளங்குகின்றது. கல்வி கற்பதற்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக இது திகழ்வதுடன், ஜெர்மன் பல்கலைக்கழக பட்டங்கள் உலகளவில் தொழில் வழங்குநர்களால் மிகவும் மதிக்கப்படுகின்றன. ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மற்றும் கல்வி சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. தொழில்நுட்ப பட்டப்படிப்புகளும் ஜெர்மன் பல்கலைக்கழக பரப்பில் ஒரு முக்கிய அம்சமாகும். ஜேர்மன் அரச பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தால் பெரியளவில் மானியம் வழங்கப்படுவதுடன், கட்டணங்களும் ஒப்பீட்டளவில் குறைவாகும். DIMO பல ஆண்டுகளாக பிரத்தியேக ஜெர்மன் சான்றளிக்கப்பட்ட தொழில் தகைமைகளையும் வழங்கி வருகிறது. இது ஜெர்மனியின் கல்வியைப் பெறும் உள்ளூர் மாணவர்களின் கனவுகளை நனவாக்குகிறது. ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றில் மேன்மை, பரந்த அளவிலான கற்கை நெறிகள், கோட்பாடு மற்றும் நடைமுறைக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகள் மற்றும் பாதுகாப்பான மற்றும் பொருளாதார ரீதியாக நிலையான சமூகம் ஆகியவை சர்வதேச கல்வி இலக்காக ஜெர்மனி திகழ்வதற்கான பல காரணங்களில் சிலவாகும்.

இருப்பினும், ஜெர்மன் மொழி சரளமாக இருக்க வேண்டியமை மற்றும் நீண்ட (6- 12 மாதங்கள்) அனுமதி செயல்முறை போன்ற முன்நிபந்தனைகளால் ஜெர்மன் பல்கலைக்கழகங்களுக்கான அணுகல் இலங்கை மாணவர்களுக்கு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. பொறியியல், வணிகம் மற்றும் கலை தொடர்பான பட்டங்களுக்கு ஜெர்மன் மொழியில் முன் அறிவு தேவையில்லை என்பதால் இந்த தடைகளை சமாளிக்க ஆரம்ப கற்கைநெறியானது உதவுகிறது. மேலும், Aachen பல்கலைக்கழகம் தேவையான ஆவணங்கள் மற்றும் ஒரு அரச பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை வழங்குவதனால் விரைவாக விசா ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதி செய்கிறது. ஆரம்ப கற்கைநெறியானது இளமானி கற்கையின் போது ஜெர்மனியில் ஒரு சுதந்திர வாழ்க்கைக்கு மாணவர்களை தயார்படுத்துகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் உள்வாங்கல் 2021 ஜூன் 30 ஆம் திகதி நிறைவடைகின்றது. ஜெர்மன் பட்டப்படிப்புடன் உலகை வெல்ல ஆர்வமுள்ள மாணவர்கள் 0773415243 என்ற எண்ணின் ஊடாகவோ அல்லது [email protected]க்கு மின்னஞ்சல் ஒன்றை  அனுப்புவதன் மூலமோ தனிப்பட்ட தொழில் வழிகாட்டுதலுக்காக DIMOவுடன் சந்திப்பொன்றை முற்பதிவு செய்து கொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *