HUAWEI Band 6 அறிமுகம்: இரு வார மின்கல ஆயுளுடன் 1.47 அங்குல AMOLED திரை

Huawei சமீபத்தில் தனது HUAWEI Band தொடரின் புதிய உறுப்பினரான HUAWEI Band 6 இனை அறிமுகப்படுத்தியிருந்தது. அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களுக்கான கேள்வி நுகர்வோரிடமிருந்து அதிகரித்துள்ளதன் காரணமாக, வடிவமைப்பு, மின்கல ஆயுள், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்பு ஆகியன தொடர்பில் பாரிய மேம்படுத்தல்களுடன் புதிய HUAWEI Band 6 வெளியிடப்பட்டுள்ளது.

1.47 அங்குல AMOLED முழுத் திரைக் காட்சியை 64 சதவீத திரைக்கு : உடல் விகிதத்துடன் உள்ளடக்கிய Huawei யின் முதலாது ஸ்மார்ட் கைப்பட்டியாக HUAWEI Band 6 விளங்குகின்றது. அதாவது ஸ்டைலை பேணியவாறு அதிக தகவல்களைக் காண்பிப்பதே இதன் முக்கிய நோக்கமாக அமைகின்றது. அது மாத்திரமன்றி HUAWEI Band 6 ஆனது, ஏனைய Huawei ஸ்மார்ட் அணிகலன் தயாரிப்புகளிலிருந்து இரண்டு வார மின்கல ஆயுளை வழங்குவதன் மூலம் வேறுபடுகிறது.

ஸ்மார்ட் பேண்டுகளுக்கு சொகுசாக இருத்தல், துல்லியமான சுகாதார கண்காணிப்பு ஆகியன மிக முக்கியமானவையாகும் இதைக் கருத்தில் கொண்டு, HUAWEI Band 6 ஆனது, வடிவமைப்பு, அதன் மூலப்பொருள் உள்ளிட்ட பல்வேறு உணர்திறன் மிக்க தொழில்நுட்பங்களில் தனது உயர் கவனத்தை செலுத்தியுள்ளது. இலகுரக எடையில் அமைந்து, நாள் முழுவதும் சுகாதார கண்காணிப்பு அனுபவத்தை வழங்கும் இதன் எடை 18 கிராம் மட்டுமேயாகும். HUAWEI Band 6 ஆனது, முழு நாளும் SpO2 இன் கண்காணிப்பை ஆதரிக்கும் முதலாவது Huawei ஸ்மார்ட் பேண்ட் மட்டுமல்லாது,  பயனர்களின் இதய துடிப்பு, தூக்கம், மன அழுத்தம் மற்றும் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு போன்ற முழு அளவிலான சுகாதார கண்காணிப்பு அம்சங்களையும் அது வழங்குகிறது. உடற்பயிற்சி கண்காணிப்புக்காக, உடற்பயிற்சி செய்ய உதவும் தொழில்முறை ரீதியிலான தரவு கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான 96 பயிற்சி முறைகளை வழங்கி, விஞ்ஞான ரீதியில் உடற் பயிற்சிகளை மேற்கொள்ள HUAWEI Band 6 பயனர்களுக்கு உதவுகின்றது.

HUAWEI Band 6 ஆனது, தெளிவான உள்ளடக்கத்தின் வெளிப்பாட்டிற்காக 194 x 368 மற்றும் 282PPI தெளிவுத்திறனுடனான 1.47 அங்குல AMOLED முழுக்காட்சி திரையைக் கொண்டுள்ளது. அதற்கு முன்னரான வெளியீடுகளுடன் ஒப்பிடும்போது, 148 வீத பெரிய திரை, திரைக்கு : உடல் விகிதம் 64 வீதம் எனும் குறிப்பிடத்தக்க அளவிலான மேம்பாடு ஆகியவற்றை இது கொண்டுள்ளது. வண்ண மயமான திரையின் காட்சி, பயனர்களுக்கு அதிக தெளிவை வழங்குவதுடன், பயனர் நட்பு காட்சியின் அடிப்படையில் பயிற்சி மற்றும் சுகாதாரத் தரவை அது வழங்குகிறது. ஸ்மார்ட்போன் தொடுதிரைகளைப் பயன்படுத்துவதைப் போன்று, மேல் மற்றும் கீழ், இடது மற்றும் வலதுபுறமாக பயனர்கள் எளிதாக தேய்ப்பதன் மூலம் இதை பயன்படுத்தலாம்.

HUAWEI Band 6 ஆனது, கறுப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, பச்சை (Graphite Black, Amber Sunrise, Sakura Pink, Forest Green) ஆகிய நிறங்களில் பயனரின் பாணிக்கு அல்லது அவர்களது அலங்காரத்துக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெரிய திரை, மின் நுகர்வை நிர்வகிக்கும் வகையிலான நீண்ட மின்கல ஆயுள் ஆகியவற்றின் மூலம்  HUAWEI Band 6 ஆனது Huawei யின் ஏனைய ஸ்மார்ட் அணியகலன்களிலிருந்து  தன்னை வேறுபடுத்துகிறது. உயர் திறன் கொண்ட chipset மற்றும் ஸ்மார்ட் மின்கல சேமிப்பு வழிமுறைகளுக்கும் அது இசைவாகின்றது. HUAWEI Band 6 ஆனது, தொடர்ச்சியான இதய துடிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பை 14 நாள் மின்கல ஆயுள் மூலம் தடையின்றி பேண உதவுகிறது. அது தவிர, HUAWEI Band 6 ஆனது, காந்தப்புல சார்ஜர் வழியாக வேகமாக சார்ஜ் செய்வதற்கும் ஒத்திசைகிறது. ஐந்து நிமிட மின்னேற்றத்தின் மூலம் ஸ்மார்ட் பேண்டை இரண்டு நாட்கள் வரை வழக்கமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். 18 கிராம் எடையுள்ள, தெளிவான முழுக்காட்சி திரை மற்றும் 2 வார மின்கல ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ள HUAWEI Band 6 ஆனது, ஒரு குறிப்பிடும் மாற்றத்திற்கான அணிகலனாகும்.

HUAWEI Band 6 ஆனது, உடற்பயிற்சி கண்காணிப்பின் வழக்கமான வடிவத்தை மறுவடிவமைப்பதன் மூலம் வழிநடத்துவதோடு மட்டுமல்லாமல், சந்தையில் மிக மாறுபட்ட நுழைவு-நிலை அணியகலன் தயாரிப்புமாகும். அதன் “Go Bigger for Better” (சிறந்ததற்காக பெரிதாக செல்) எனும் உத்வேகத்துடன், HUAWEI Band 6 ஆனது, 7 நாட்களும் 24 மணிநேரமும் சுகாதார முகாமைத்துவம் மற்றும் உடற்பயிற்சி மேம்பாட்டிற்கான ஸ்மார்ட் அனுபவத்தை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வாழ, பயனர்களுக்கு புதிய வழிகளை நிறுவ உதவுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Band 6 ஆனது, ரூ. 15,999 எனும் விலையில், அனைத்து Huawei அனுபவ மையங்களிலிருந்தும், சிங்கர் காட்சியறைகளிலிருந்தும் கிடைப்பதுடன், ஒன்லைனில்  Singer.lk மற்றும் Daraz.lk. வழியாகவும் அதனைக் கொள்வனவு செய்ய முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *