Huawei PC Manager: கணினிகளின் பொதுச் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்யும் கருவி

Huawei ஆனது hardware மற்றும் software தீர்வுகள் இரண்டிலும் அதன் திறன்மிக்க முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக, Huawei சாதன பயனர்களுக்கு சிறந்த புதுமையான தொழில்நுட்பங்களை வழங்க ஒருங்கிணைத்துள்ளது. இதுபோன்ற பல்துறை மற்றும் முழுமையான ஒருங்கிணைந்த பயன்பாடானது Huawei PC Manager மூலம் பொதுவான கணினிகளின் சிக்கல்களை சரிசெய்ய உதவுகிறது.

அதே நேரத்தில் Huawei மடிக்கணினிகளை சீராக இயங்க வைக்க முக்கியமான உதவிக்குறிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது.PC Manager ஆனது கணினி அல்லது மடிக்கணினி உள்ள அனைவருக்கும் இன்றியமையாதது. ஏனெனில் விரைவான கவனம் தேவைப்படும் சிக்கல்களை அவர்கள் அடிக்கடி எதிர்கொள்கிறார்கள். IT யில் சராசரி அறிவு உள்ள ஒருவர் கணிணியில் ஏற்படும் சிக்கல்களை தனியாக அனுகுவது கடினம். அதற்கு ஆதரவளிக்கும் விதமாக Huawei PC Manager முன்னணியில் வந்து, அனைத்து முக்கியமான உதவிகளையும் நொடிப்பொழுதில் வழங்குகின்றது.


விரைவான சேவைகள், விரைவான பழுதுபார்ப்பு, உதவிக்குறிப்புகள் போன்ற அம்சங்களில் Huawei PC Manager ஈடுசெய்ய முடியாதது. மென்பொருளை செயல்படுத்த விரும்புகிறீர்களா? Wi-Fi உடன் இணைக்க முடியவில்லையா? PC Manager இல் உள்ள ‘விரைவு சேவைகள்’ என்பது பொதுவான மடிக்கணினி சிக்கல்களைத் தீர்க்கவும், Wi-Fi, hotspot, Audioபோன்ற அம்சங்களை நெறிப்படுத்தவும் உதவுகிறது. எளிமையான மற்றும் வசதியான பயனர் interface கட்டமைப்பானது, Huawei PC Manager ஒரு கேள்விகள் பிரிவுடன் உருவாகியுள்ளது. இதனால் விரைவான சேவைகளில் எளிதில் அணுகக்கூடியதாக உள்ளது.

இது பொதுவான மடிக்கணினி சிக்கல்களை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்த விரிவான தகவல்களைக் கண்டறிய பயனருக்கு உதவுகிறது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளான operating system, display, shutting down அல்லது rebooting, appearance, accessories, system software, connectivity and Bluetooth, Battery and charging  உட்பட பலவற்றுடன் தொடர்புடைய தகவல்களை இது உங்களுக்கு வழங்குகின்றது. உங்கள் சிக்கலை தீர்க்கும் பிரிவானது பயனருக்கு, கணினி சிக்கல்களை ஒரே தட்டில் கண்டறிந்து அவற்றை எளிதாக சரிசெய்ய உதவுகின்றது. அதே நேரத்தில் உங்கள் மடிக்கணினியிலிருந்து அதிகமானவற்றைப் பெற பயனுள்ள உதவிக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகளை வழங்குகின்றது. PC Manager ஆனது மிகப்பெரிய பழுதுகளுக்கான சேவைகளை வழங்குவதோடு பயணுள்ள தரவுகளை தருகின்றது. அத்தோடு அதன் உத்தரவாதக் காலத்தில் புதிய சலுகைகள், உதிரிபாகங்களின் விலைகள், சேவை மையங்களின் இருப்பிட தரவுகள் மற்றும் மிக முக்கியமாக பழுதுபார்ப்பு சேவை மற்றும் விசாரணைத் தரவுகளையும் வழங்குகின்றது. அத்தோடு இயக்கிகளின் மேம்படுத்தலுக்காக அனைத்து இயக்கிகளும் புதுப்பித்த நிலையில் இருப்பதை அது உறுதிசெய்கிறது.  அத்தோடு கணினியின் நிலைத்தன்மையை பராமரிப்பதுடன்   மற்றும் இயக்கி செயல்திறனை மேம்படுத்துகிறது.
Huawei PC Manager ஐ  https://consumer.huawei.com/en/support/pc-manager/ வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *