K Seeds Investments இன் இரண்டாம் தரவரிசையில் முன்னிலை பெற்ற Singer Finance

K Seed Investments  நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்’ அறிக்கையின் அண்மைய தேசிய தரவரிசையில் சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா)  இலங்கையின் இரண்டாம் தர நிதி நிறுவனங்களின் தரப்படுத்தலில் சிறப்பாக செயற்படும் நிதி நிறுவனமாக தெரிவாகியுள்ளது.

K Seed Investments இனால் வெளியிடப்படும் இந்த அறிக்கையானது சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா) வினை இரண்டாம் தர நிதி நிறுவனங்களுக்கான பிரிவில் ( ரூபா 20 – 100 பில்லியன் சொத்துத் தளத்துடன் கூடியவை) முன்னணி நிறுவனமாக பெயரிட்டுள்ளதுடன், இந்தப் பிரிவில் பெயரிடப்பட்ட 12 நிறுவனங்களில் இருந்தே இத் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா)  விற்கான இந்த கௌரவமானது, 2019/’20  நான்காம் காலாண்டில் (ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை) அவர்களின் சிறப்பான செயற்பாட்டைக் கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்ட தரப்படுத்தலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா)  வின் தலைவர் அரவிந்த பெரேரா கருத்து தெரிவிக்கையில், “இந்த உயர்ந்த தரப்படுத்தலானது, சிங்கர் ப்பினான்ஸின் நம்பகத்தன்மை மற்றும் முதலீடுகளின் வருமானம் மீதான வளர்ந்துவருவதை ஏற்றுக்கொள்வதற்கான  தெளிவான அறிகுறியாகும். இது தொழிற்துறையிலிருந்து எமக்குக் கிடைக்கப் பெற்ற நம்பிக்கை வாக்குறுதியாக உள்ளதுடன், இந்த பாராட்டினால் நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம்”, என்றார்.

இந்த அறிக்கையானது பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களை அவர்களின் சொத்துத் தளத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதுடன், அவர்களை அவர்களுக்குரிய பிரிவுகளில் அவர்களுக்கு இணையான நிறுவனங்களுடன் தரப்படுத்துகின்றனர். சிங்கர் ப்பினான்ஸ், ‘பிரிவு 2’ இல் முதலிடம் பெற்றது.

இந்த அறிக்கையின் முடிவுகள் பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் எதிர்ப்பார்ப்பை அடைந்துகொள்ளும் பொருட்டு சிங்கர் ப்பினான்ஸின் மிக உயர்ந்த தரத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை எடுத்துரைப்பதாக தலைவர் அரவிந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.

‘இலங்கையின் பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் தரவரிசை’ அறிக்கையானது நிதி நிறுவனங்களை கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் இடைக்கால அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் தரப்படுத்துகின்றது. இந்த கணக்கெடுப்புக்கான மாதிரியானது எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட பரிவர்த்தனையில் பட்டியல்படுத்தப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களைக் கொண்டிருந்தது. இந்த நிறுவனங்களானது வெளியிடப்பட்டுள்ள அண்மைய காலாண்டு நிதி அறிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன. நிதி நிறுவனங்கள் தமது சொத்துத் தளத்தின் அளவின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. இந்த 1,2,3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளானது, முறையே ரூபா 100 பில்லியனுக்கும் அதிக சொத்துத் தளம், ரூபா 20 – 100 பில்லியனுக்கும் இடையிலான சொத்துத் தளம், ரூபா 10 – 20 பில்லியன் சொத்துத் தளம் மற்றும் ரூபா 10 பில்லியனுக்கும் குறைவான சொத்துத் தளம் ஆகியவற்றைக் குறிக்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *