Keells உடன் இணைந்து பிரத்தியேக சலுகையை வழங்கும் Pelwatte

Pelwatte Dairy Industries நிறுவனமானது, கிறிஸ்மஸ் மற்றும் டிசம்பர் பண்டிகைக் காலத்தை வரவேற்கும் வகையில், Keells உடனான பிரத்தியேக கூட்டாண்மையுடன் 2021 டிசம்பர் 01 முதல் 31 வரை 15% சலுகை தள்ளுபடியில் அவர்களின் பிரத்தியேக தயாரிப்பான உப்பிடப்பட்ட வெண்ணெயை (Salted Butter) வழங்குகிறது.

இந்தச் சலுகை குறித்து Modern Trade விற்பனை முகாமையாளர் சமிந்த பத்திரண கருத்துத் தெரிவிக்கையில், “சமையலறைகளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த காலப் பகுதியே இதுவாகும், குடும்பங்கள், நண்பர்கள், சமூகங்கள் ஒன்று கூடி உணவை வெளிப்படுத்தும் காலம் இதுவாகும். அத்துடன் பெல்வத்த, அவர்கள் விரும்பும் தயாரிப்புகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறது.” என்றார்.

பெல்வத்த வெண்ணெய், உள்நாட்டில் கிடைக்கும் பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதுடன், அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளதுடன் மிக ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. வெண்ணெயானது, புதிய பாலில் உள்ள கொழுப்பிலிருந்து, எவ்வித சுவையூட்டிகளும் இடப்படாமல் தயாரிக்கப்படுகிறது. இது சுமார் 84% கொழுப்பைக் கொண்டுள்ளது. வெண்ணெய் உற்பத்திச் செயன்முறையானது, கொழுப்பின் சதவீதத்தை அதிகரிக்கிறது, எனவே கொழுப்பின் சதவீதத்தை கட்டுப்படுத்த தரநிலைப்படுத்தல் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது. இதுவே பெல்வத்த வெண்ணெய் இயற்கையானது என்பதற்கு மற்றொரு காரணமாகும். அவை மிக உயர்ந்த தர நிர்ணயத்துடன், எவ்வித செயற்கை பதனூட்டிகளும் இன்றி தயாரிக்கப்படுவதுடன் நீண்ட நாட்களுக்கு பழுதடையாத வகையிலான ஆயுளையும் கொண்டுள்ளது.

Pelwatte Dairy ஆனது நாட்டின் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்தல் எனும் நோக்கத்தை எப்போதும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் பால் பண்ணையாளர்களின் சமூக பொருளாதார நிலையையும் அது மேம்படுத்துகிறது. நாடு பாலில் தன்னிறைவை அடைவதை பிரதான இலக்காக கொண்டுள்ள அதேவேளையில், விவசாயிகள், அவர்களது வாழ்வாதாரம் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பல்வேறு வழிகளில் பெல்வத்த பால் பண்ணை உதவுவதுடன், அவர்களை வலுவூட்டி அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ வழிவகுப்பதுடன், நாட்டின் செழிப்பிலும் கவனம் செலுத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *