My Huawei App இலங்கையில் வெளியீடு

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, My Huawei App மூலம் அதன் பயனர்களுக்கு புதிய, ஸ்மார்ட் பயணத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த செயலியானது, வாடிக்கையாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உரிய சேவைகளை அவர்கள் கண்டறிவதற்குமான உத்தியோகாபூர்வ, ஒரே இடத்தில் அனைத்தும் ஒருங்கிணைந்த தளமாகும். My Huawei App என்பது Huawei ஸ்மார்ட் போன்களில் முற்கூட்டியே நிறுவப்பட்ட Huawei Support App இனது புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும் என்பதுடன், இது Huawei நிறுவனத்தின் உத்தியோகபூர்வ உதவிக் குழுவுடன் நேரடியாக இணைவதற்கான உத்தியோகபூர்வ தளமாகும்.

பயனர்களுக்கு Huawei உதவிக் குழுவிடமிருந்து நேரடியாக உதவியைக் கோருவதற்கான வாய்ப்பை இந்த செயதில வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளைக் காணலாம்.

Huawei சாதனத்தின் இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “புதிய Huawei அனுபவம், அதன் முழுத் தொகுதியின் இணைப்பு மற்றும் தொடர்ச்சியான அறிவுப் பகிர்வு ஆகியன, எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில், அவர்களுடனான ஒன்றிணைந்த உரையாடல்கள் மூலம் புத்தாக்கம் கொண்ட புதிய விடயங்களை அவர்கள் அணுகவும் அதனை மேம்படுத்துவதற்கும் முக்கியமாக அமைகின்றன.” என்றார்.

MY HUAWEI ஆனது, இதற்கு முன்னர் காணப்பட்ட உதவி வழங்கும் செயலியின் முழு அம்சங்களையும் உள்ளடக்கியதுடன், பயனர்கள் அனைத்தையும் கண்டறிந்து அவை அனைத்திலும் முழு தெளிவைப் பெறும் வகையில் அதில் மேலும் பல விடயங்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே பார்வையில் பெறலாம். சமீபத்திய Huawei தொடர்பான செய்திகள், பிரம்மாண்ட நிகழ்வுகள், தயாரிப்பு வெளியீடுகள் அல்லது மாபெரும் விற்பனை நிகழ்வுகளைப் பற்றி இதன் மூலம் முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். பயனர்கள் ஏற்கனவே தங்களது சாதனங்களில் Huawei Support App செயலியை வைத்திருந்தால், அவர்கள் அதை கைமுறையாக புதுப்பிக்கலாம் அல்லது Huawei AppGallery இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Harmony 2.0 அல்லது அதற்குப் பின்னரான பதிப்புகளைக் கொண்ட எந்தவொரு Huawei சாதனங்களும் MY HUAWEI செயலியை முன்கூட்டியே நிறுவியவாறு வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பயனர்கள் அதைத் தங்கள் திரையில் அல்லது பின்வரும் முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவதன் மூலம் அதைக் காணலாம்: முகப்புத் திரையை கீழே ஸ்லைட் செய்து, அதைத் தேடுதல் அல்லது MY HUAWEI என டைப் செய்து தேடுதல் அல்லது பயனர்கள் AppGallery இற்குச் சென்று அதனைத் தேடலாம். MY HUAWEI APP இற்கான புதுப்பிக்கப்பட்ட 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட EMUI பதிப்புகளைக் கொண்ட சாதனங்களுக்கு இது கிடைக்கிறது.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, முழுமையாக இணைக்கப்பட்ட, அறிவார்ந்த உலகத்திற்காக ஒவ்வொரு நபருக்கும், வீட்டிற்கும் மற்றும் நிறுவனத்திற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் எனும் வகையில், Huawei புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகள் தரவரிசையில் தொடர்ந்து  முன்னணியில் இடம்பிடித்து வருகிறது. மிக மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகளின் BrandZ 100 இடங்களுக்கான பட்டியலில் Huawei 45ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் 79ஆவது இடத்தையும், சமீபத்திய Brand Finance Global 500 மிக மதிப்புமிக்க தரக்குறீயுடுகள் பட்டியலில் முதல் 10 தரக்குறியீடுகளில் ஒன்றாக Huawei நிறுவனம் இடம்பெற்றுள்ளது. Interbrand இன் சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகளில் 68ஆவது இடத்தைப் பெற்றுள்ள Huawei, Fortune’s Global 500 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *