‘OCL Sewa Abhiman 2022’ Loyalty விருதுகள் விழாவில் நீண்ட கால சேவை கொண்ட 145 ஊழியர்களை கௌரவித்த Ocean Lanka

Ocean Lanka தனியார் நிறுவனம், இலங்கையின் மிகப் பெரும் பின்னல் துணி உற்பத்தி நிறுவனமாகும். அது தனது நீண்டகால சேவை ஊழியர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தை கௌரவிக்கும் வகையில் ‘OCL Sewa Abhiman 2022’ Loyalty Awards (விசுவாச விருதுகள்) நிகழ்வை அண்மையில் நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் Ocean Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி Austin Au தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டபோது, “பல வருட அர்ப்பணிப்பு மற்றும் கடமையுணர்வு கொண்ட ஊழியர்களை கொண்டிருப்பது, Ocean Lanka வின் அதிர்ஷ்டமாகும். அவ்வாறான ஊழியர்களின் விசுவாசம், நிறுவனம் இன்று அடைந்துள்ள மரியாதைக்கு சான்றாகும். தற்போது வரை, 10 வருடங்களுக்கும் மேலான சேவையை நிறைவு செய்துள்ள 788 ஊழியர்கள் Ocean Lanka வில் கடமையாற்றி வருகின்றனர். இது மொத்த பணியாளர்களில் சுமார் 41% ஆகும். மேலும் 190 பேர் 20 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை பூர்த்தி செய்துள்ளனர். இது மொத்த ஊழியர்களில் 10% ஆகும். குறிப்பாக தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத்தன்மையை நிறுவனம் மனதார பாராட்டுகிறது.” என்றார்.

‘OCL Sewa Abhiman 2022’ Loyalty விருதுகளானவை, Ocean Lanka நிறுவனத்தின் மிக முக்கியமான பணியாளர் அங்கீகார நிகழ்வாகும். Ocean Lanka நிறுவனம், அதன் ஊழியர்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கு மதிப்பளிக்கிறது. தமது நீண்ட சேவைக்காக கௌரவமளிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஊக்கத்தை அளிக்கிறது.

ஊக்கத்தொகைகளை ஒதுக்கீடு செய்தல், ஊழியர்கள் தங்களால் முடிந்த உச்சபட்ச திறனை வெளிக்காட்டுவதற்காக அவர்களை ஆர்வமூட்டுதல் தொடர்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, தனது ஊழியர்களின் தொழில்சார் மேம்பாடு மற்றும் விசுவாசத்திற்காக, Ocean Lanka பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *