SLIM பட்டமளிப்பு விழாவில் அங்கீகரிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட SADAHARITHA PLANTATIONS பணியாளர்கள்

Sadaharitha Plantations’ நிறுவனத்தின் 40 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற Sri Lanka Institute of Marketing (SLIM) இன் பட்டமளிப்பு விழாவில் தொழில்தர சந்தைப்படுத்தல் தகமையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் மற்றும் SLIMஇன் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Sadaharitha குழு நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி. பிரதீப் எட்வர்ட் இந்த நிகழ்வில் SLIM இன் ‘Fellow Life Member’ எனும் அங்கீகாரத்தை பெற்றுகொண்டார்.

இலங்கையில் முன்னோடி வணிக வனாந்தர செய்கை நிறுவனமான Sadaharitha Plantations, பாரிய அந்நிய செலாவணி வருமானம் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பன்முகப்படுத்தப்பட்ட பசுமை முதலீட்டு வாய்ப்புகளையும், சிறந்த வருமானத்தையும் வழங்குகிறது. இந் நிறுவனம் தனது பணியாளர்களை அவர்களின் தனித்துவமான சேவை மற்றும் ஆதரவு காரணமாக வெற்றியின் முக்கிய காரணிகளாக அங்கீகரிக்கிறது. இதற்காக Sadaharitha, தொடர்ச்சியான பயிற்சி மற்றும் அபிவிருத்தியின் மூலம் தனது மனிதவளத்தின் ஆற்றல் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. இன்றுவரை, இந்த பயிற்சித்திட்டத்தின்  மூலம் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் பயிற்சி மற்றும் அபிவிருத்தித் பிரிவானது அத்தகைய பயிற்சித்திட்டங்களை அணியினருக்கு வழங்கி அவர்களின் தொழில் மற்றும் தங்களை மேம்படுத்தி கொள்ள உதவுகிறது.

Sadaharitha Plantations இன் பல பணியாளர்கள், National Diploma in Marketing Management மற்றும் தொழிற்தர சந்தைப்படுத்தல் கற்கைநெறிகள் மூலம் தங்கள் தொழில்சார் தகுதிகளை மேலும் மேம்படுத்திக் கொண்டதுடன், நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் மதிப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் தங்கள் திறன்களையும் வளர்த்துக் கொண்டனர். இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அதிக தகுதி வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட நிறுவனமாக Sadaharitha அங்கீகரிக்கப்பட்டது. இது Sadaharithaவின் பெறுமானங்களுக்கு ஒரு உண்மையான சான்றாகும். SLIM இன் ‘Fellow Life Member’ என்ற அங்கீகாரம் Sadaharitha நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி பிரதீப் எட்வர்ட் அவர்களுக்கு இதன் போது வழங்கி கௌரவிக்கப்பட்டது. SLIM இன் முன்னைய தலைவராகவும், ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராகவும். சந்தைப்படுத்தல் துறையில் தேசத்துக்கும் நிறுவனத்துக்கும் அவர் செய்த சேவைகளுக்காக இந்த உயரிய கௌரவம் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. அவர் Sri Lanka Institute of Marketing in இன் தலைவராக இருந்த போது, அந்தக் கல்வியகம் மிக உயர்ந்த நிதி செயற்திறனை வெளிப்படுத்தியிருந்தது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sadaharitha Group இன் தலைவர் சதீஸ் நவரத்ன இந்த பயிற்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”பணியாளர்கள் வேகமாக தமது தொழில்வாழ்வில் முன்னேறக்கூடிய வகையிலான கட்டமைப்பை நிறுவியுள்ளது. எங்கள் கட்டமைப்பு எங்கள் பணியாளர்களுக்கு கனிஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் பதவிகளில் இருந்து சிரேஷ்ட முகாமைத்துவ நிலைகள் வரை வளர்வதற்கு வாய்ப்பளிக்கிறது. தொழில்முறை தகுதிகளைப் பெறுவதில் பணியாளர்களுக்கு உதவவும், அதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் நிறுவனம் உதவியது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,”என்றார்.

இது தொடர்பில் கலாநிதி பிரதீப் எட்வர்ட் கருத்து தெரிவிக்கையில், “ஒரு நிறுவனமாக, எங்கள் அணிகளுக்கு அவர்களின் தொழில் மற்றும்  வாழ்க்கையில் முன்னேற தேவையான பயிற்சி மற்றும் அபிவிருத்தியை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். SLIM உடனான எங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம், குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் SLIM இலிருந்து மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மதிப்பிற்குரிய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தகைமைகளை எங்கள் ஊழியர்களுக்கு வழங்க எங்களுக்கு உதவியது. எங்கள் பணியாளர்களுக்கான தொழில்முறை கற்கைநெறிகளுக்கான முழு செலவும் நிறுவனத்தால் ஏற்கப்படுகிறது என்பது தொடர்பில் நான் பெருமிதம் கொள்கிறேன்,”என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *