இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான HUTCH, SLIM Digis 2.3 இல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதன் மூலம், டிஜிட்டல் துறையில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருகிறது. Creator/Influencer Digital Marketing பிரிவில் வெண்கல விருதைப் பெற்றதன் மூலம் HUTCH இப்பெருமையை பெற்றுள்ளது. டிஜிட்டல் துறையில் அதன் புத்தாக்கமான அணுகுமுறையை இது எடுத்துக்காட்டுகிறது. அது மாத்திரமன்றி சிறந்த செயற்திறன் மிக்க சந்தைப்படுத்தலுக்கான (Best Performance Marketing) Merit விருதை HUTCH பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. நிறுவனம் முன்னெடுத்த, தாக்கத்தை ஏற்படுத்தும் பிரசாரங்களுக்கான விசேடத்துவத்தை இது வெளிப்படுத்துகின்றது. டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் முன்னணியில் இருப்பதற்கான HUTCH கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த கௌரவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. Hutch படைப்பாற்றல் மற்றும் செயற்றிறனைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள வழிகள் மூலம் இணைவதை இது காட்டுகின்றது.
2023-11-24