Velvet அனுசரணையுடன் யாழில் இடம்பெற்ற வணக்கம் Jaffna பிரம்மாண்ட இசை மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் Velvet அனுசரணையுடன் அண்மையில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசை மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘வணக்கம் Jaffna’ வெற்றிகரமாக நடைபெற்றிருந்தது.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலங்களான மானசி, ஶ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், ஹரிப்பிரியா, சாம் விசால் உள்ளிட்டோர் பங்குபற்றிய இந்நிகழ்வில், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் நகைச்சுவை புகழ் குரேஷி மற்றும் நவீன் உள்ளிட்டோரும் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் சூப்பர் சிங்கர் பாடகர்கள் தங்களது இனிமையான குரலால் இரசிகர்களை வசீகரித்ததோடு, அவர்களை நடனமாடவும் வைத்தனர். நிகழ்ச்சியை நகைச்சுவை குறையாது விஜய் டிவி பிரபலமான குரேஷி தொகுத்து வழங்கியிருந்ததோடு, வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்தார். மிமிக்ரிக்கு புகழ் பெற்ற விஜய் டிவி நவீன், பல்வேறு குரல்களில் பேசியதோடு, பார்வையாளர்களுக்கு மத்தியில் பிரபலங்களை மேடைக்கே கொண்டு வந்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு Velvet (வெல்வெட்) அனுசரணை வழங்கியிருந்ததோடு, இதில் கலந்து கொண்ட மக்களை மகிழ்விப்பதற்காக பல்வேறு வகையான வேடிக்கை, விநோத நிகழ்ச்சிகளையும் அது ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கையில் அழகுக்கலை துறையில் முன்னணியில் உள்ள வர்த்தகநாமமான Velvet, உயிர்ப்பான மென்மையான (Soft) சருமத்தை விரும்புவோருக்கான ஒரு உன்னத தெரிவாக விளங்குகின்றது.  அத்துடன், 2023 LMD சஞ்சிகையின் தரப்படுத்தலுக்கமைய, தனிநபர் பராமரிப்பு சவர்க்கார பிரிவின் கீழ் Velvet சவர்க்காரம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Velvet, சிறந்த, தரமான மூலப்பொருட்கள் மூலம் சிறந்த சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளை, புதுப்பித்தவாறு தொடர்ச்சியாக சந்தைக்கு வழங்கும் ஒரு வர்த்தக நாமமாகும். தனது பயணம் முழுவதும் தனது நுகர்வோருக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ள இது, தனது சருமப் பராமரிப்பு தயாரிப்புகளுக்கு NMRA, GMP, IFRA உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. அத்துடன், சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தாது என மருத்துவ ரீதியாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. சவர்க்காரம், பொடி வொஷ், ஹேண்ட் வொஷ், பொடி லோஷன் உள்ளிட்ட பல்வேறு பரந்த தயாரிப்பு வகைகளில் Velvet வெளிவருகிறது. அனைத்து Velvet தயாரிப்புகளும் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உரிய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயங்களைப் பேணியவாறு தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இளமைத் தோற்றத்தை தொடர்ச்சியாக பேணுவதற்கும், ஈரப்பதன் இன்றியமையாத அம்சமாகும். வெப்பமான மற்றும் வெதுவெதுப்பதமான காலநிலையில் வாழும் இலங்கையர்கள் தங்களது சருமத்தை தொடர்ச்சியாக வருடம் முழுவதும் சூரிய ஒளிக்கு வெளிப்படுத்தும் நிலை காணப்படுவதால், அவர்களது ​​சருமம் வரட்சியடைவதோடு, ஈரப்பதனும் இழக்கப்படுகின்றது. எனவே, இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து மீள, ஆரோக்கியமான மற்றும் உரிய அளவில் ஈரப்பதனைக் கொண்ட சருமத்தை பேணும் பண்புகளைக் கொண்ட சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை Velvet வழங்குகின்றது.

வட மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வணக்கம் Jaffna நிகழ்ச்சியில் ஆவலுடன் கலந்து கொண்டதோடு, இசை மற்றும் நகைச்சுவை மழையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் Velvet உடன் இணைந்து பல்வேறு போட்டி நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருந்தனர்.

குதூகலம் ஊட்டிய நிகழ்வுகள்
இலங்கையர்கள் தங்களை அழகாக வைத்திருக்க தயாரிப்புகளை வழங்குகின்ற Velvet, யாழில் இடம்பெற்ற வணக்கம் Jaffna நிகழ்வில் மக்களை குதூகலத்திலும், வியப்பிலும் ஆழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நிகழ்ச்சியின் நுழைவாயிலில் வருகை தந்த அனைவருக்கும் Velvet வர்த்தகநாமம் பொறிக்கப்பட்ட பலூன்களை வழங்கி, ஆச்சரியத்திற்காக காத்திருக்குமாறு அன்போடு வரவேற்றதோடு, தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் வந்திருந்த அனைவருக்கும் பரிசுப் பொதிகளையும் வழங்கியிருந்தது.

இவ்வாறு நுழைவாயிலில் வழங்கப்பட்ட பலூன்களை நிகழ்வின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனைவரையும் ஒரே நேரத்தில் பறக்கவிடச் செய்ததன் மூலம், பரவசம் மிக்க அனுபவத்தையும் Velvet வழங்கியிருந்தது.  இது வந்திருந்த அனைவரையும் இந்நிகழ்ச்சியில் அவர்களையும் அங்கம் வகிக்க உதவியதோடு, நிகழ்ச்சியின் பெரிதும் பேசப்பட்ட விடயங்களில் ஒன்றாகவும் அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத் தக்க விடயமாகும்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *