vivo 2021 ஒரு பார்வை – உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீட்டிற்கு மற்றுமொரு வெற்றிகரமான வருடம்

பல்வேறு தயாரிப்பு அறிமுகங்கள், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை, உலகளாவிய தடம் பதிவு, வெற்றிகரமான நிகழ்வுகள், அதிக விற்பனை ஆகியவற்றுடன், உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள vivo, இலங்கையில் மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டைக் நிறைவு செய்துள்ளது. Canalys இனது கூற்றின் அடிப்படையில், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் vivo நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

2022 ஆம் ஆண்டை மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான ஆண்டாக எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டில் vivoவின் அனைத்து சாதனைகளையும் திரும்பிப் பார்ப்போம்.

தயாரிப்புவகைகளின்விரிவாக்கம்

இந்த ஆண்டு vivo தனது தயாரிப்பு வகைகளை வியக்கத்தக்க அளவில் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது V தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது, 44MP OIS Night Selfie System உடனான V21 5G மற்றும் 44MP உடனான Autofocus தொழில்நுட்பத்தைக் கொண்ட V21e ஆகியனவே அவையாகும். இவை தவிர, Y தொடர் சாதனங்களின் வரிசையாக Y1s, Y12s, Y51, Y53s ஆகிய சிறந்த அம்சங்களைக் கொண்ட, சிறந்த விலை கொண்ட சாதனங்களை அது அறிமுகப்படுத்தியது.

சுயவடிவமைபுடனானபுகைப்படவியலுக்கான chipset V1

V1 ஆனது, ஒரு முழுமையான தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சர்க்யூட் சிப் ஆகும், இது vivo ஆல் வெளியிடப்பட்ட, புகைப்படவியல் மற்றும் வீடியோ செயலிகளில், முன்னணி காட்சி தரத்தைப் பெற அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, vivoவின் புகைப்படவியல் தொகுதி வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில், viewfinder தோற்றம் மற்றும் வீடியோ பதிவு போன்ற ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக் காட்சிகளை மேம்படுத்துவதன் மூலம் இமேஜிங் சிப் V1 பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

வேகமாகவளர்ந்துவரும்இரண்டாவது 5G ஸ்மார்ட்போன்தரக்குறியீடு

2021 இன் முதலாவது காலாண்டில், உலகின் இரண்டாவது வேகமாக வளர்ந்து வரும் 5G ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக vivo மாறியது. 19 மில்லியன் சாதனங்கள் சந்தைக்கு அனுப்பப்பட்டதுடன், இது முந்தைய காலாண்டின் அடிப்படையில் 62 சதவீத அதிகப்பாகும். vivo 5G மொபைல் அனுபவத்தில் புதுமைகள் மற்றும் முன்னேற்றங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

#vivocares முயற்சியின்கீழ்பல்வேறுசமூகப்பொறுப்புநடவடிக்கைகள்

இலங்கையில் #vivocares எனும் முயற்சித் திட்டத்தின் கீழ் இரண்டு சமூக நலன் செயற்பாடுகளையும் vivo மேற்கொண்டது. முதன்முதலில் காலியில் உள்ள ஒல்கொட் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட்போர்டை (smartboard) விநியோகித்தது. தற்போதைய தொற்றுநோய் நிலைமைகளின் கீழ்1,200 சிறுவர்களுக்கு, சமமான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கற்றல் வாய்ப்பைப் பெறுவதை இது உறுதி செய்தது. இரண்டாவது நடவடிக்கையாக, இரத்தினபுரி மாவட்டத்தின் கெட்டஹெத்த தமிழ் வித்தியாலயத்தில் உள்ள வசதி வாய்ப்புகள் குறைந்த 150 சிறுவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல்  உபகரணங்கள் உள்ளிட்ட விசேட நன்கொடைகளை vivo வழங்கியது.

யூரோகிண்ணத்தில் ‘To Beautiful Moments’ பிரசாரத்திற்குஅனுசரணை

Graphical user interface

Description automatically generated

EURO கிண்ணத்திற்கு அனுசரணை வழங்கும் ஒருவராக ஆனதுடன், அதன் To Beautiful Moments (அழகான தருணங்களுக்கு) எனும் பிரசாரத்தையும் முதன் முதலில் அதில் அறிமுகப்படுத்தியது. இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இரசிகர்கள் அத்தருணத்தை அனுபவிப்பதை ஊக்குவிக்கின்ற தளமாக செயற்பட்டது.

5G தொழில்நுட்பத்தில்புத்தாக்கம்

vivo பாரிய அளவிலான வகையில் 5G இற்கு ஏற்ற வகையில் மாறுவதனை நோக்கிச் செல்லும் வகையில் 5G சாதனங்களை கட்டுப்படியாகும் விலையில் மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் 20 5G சாதனங்களின் வகைகளை அது வெளியிட்டுள்ளது. 3GPP இற்கு 5,000 இற்கும் மேற்பட்ட 5G திட்டங்களை vivo சமர்ப்பித்தது. இது 15 தொழில்நுட்ப அம்சங்களுக்கு வழிவகுத்ததுடன், மூன்று தொழில்நுட்பத் திட்டங்களுக்கு அனுமதியைப் பெற்றது. இவை தவிர 5G கண்டுபிடிப்புகளுக்காக 3,000 காப்புரிமைகளை vivo கொண்டுள்ளதுடன், 3GPP உடனான நிறுவனத்தின் செயற்பாடுகளின் அடிப்படையில் முதல் 8 இடத்தை பிடித்துள்ளது.

National Geography அலைவரிசைஉடனானகூட்டாண்மை – VISION + Mobile Photo விருதுகள்

vivo இரண்டாவது முறையாக National Geography அலைவரிசையுடன் இணைந்து VISION+ Mobile Photo விருதுகளை அறிமுகப்படுத்தியது. படைப்பின் வெளிப்படுத்தல் மூலமான மகிழ்ச்சியைத் அனுபவிப்பதற்கும் மொபைல் புகைப்படவியல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், அதிகமான மக்களை அது தொடர்பில் ஊக்குவிக்கவும் vivo தீவிரமாகச் செயல்பட்டுள்ளது.

புத்தாண்டுஊக்குவிப்புபிரசாரம்

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது “அவுருது வாசி” எனும் விசேட பிரசாரத்தை vivo ஆரம்பித்தது. இந்த பிரச்சாரத்தின் போது, ​​தனது வாடிக்கையாளர்கள் பிரத்தியேகமான vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும்போது vivo பரிசுப் பொதிகள் உள்ளிட்ட ஏனைய அற்புதமான பொருட்கள் மற்றும் விசேட விலைக் கழிவுகளை  வெல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

Daraz நுகர்வோர்சலுகைகள்

இலங்கையின் நம்பர். 1 மற்றும் மிகப் பெரிய ஒன்லைன் சந்தையான Daraz.lk உடன் இணைந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கி அதன் டயமண்ட் தூதுவர்களில் ஒருவராக vivo மாறியது. பிரத்தியேகமான vivo V மற்றும் Y ஸ்மார்ட்போன் தொடர்களை கொள்வனவு செய்யும் போது வாடிக்கையாளர்கள் அற்புதமான பரிசுகளை வெல்லவும் முடிந்தது.

vivoவின் 4ஆவதுஆண்டுவிழா

Text

Description automatically generated

vivo சமீபத்தில் இலங்கையில் அதன் 4ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடியதுடன், அதன் அனைத்து பங்காளிகள், ஊழியர்கள், விநியோத்தர்கள் மற்றும் நுகர்வோரின் நிலையான ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்தது. தொழில்நுட்பத்தை நோக்கிய இந்த நிலையான தேடல்களின் அடிப்படையில், vivo இவ்வருடம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக மாறியதன் மூலம் சில அற்புதமான சாதனைகளை செய்துள்ளது. அதே நேரத்தில் 2,000 இற்கும் மேற்பட்ட வலுவான சில்லறை விற்பனை வர்த்தக நிலைய வலையமைப்பு மற்றும் ப்ரீமியம் சேவையை வழங்கும் 2 பிரத்தியேக சேவை மையங்களையும் கொண்டுள்ளது.

அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், மற்றும் எஸ்எல்டி-மொபிடெல் உள்ளிட்ட சில முக்கிய தொழில்துறை நிறுவனங்களுடன், vivo உறுதியான கூட்டுறவை பேணி வந்துள்ளது.

அந்த வகையில் மற்றுறொரு வெற்றிகரமான ஆண்டிற்குப் பின்னர், 2022 இலும் எல்லைகளைத் தாண்டி அதிக உச்சத்தை அடைய vivo தயாராக உள்ளது. அடுத்த ஆண்டில் vivo எமக்காக எத்தகைய விடயங்களை வழங்கப் போகின்றது என்பதைப் பார்க்க நாம் ஆவலாக உள்ளோம்!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *