இலங்கையின் முதலாவது ‘Bison’ போட் டிரக்டரை அறிமுகப்படுத்தி உள்ளூர் விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ‘DIMO Agribusinesses’

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses மூலம் இலங்கையில் முதலாவது படகு வகை போட் டிரக்டரான Bison ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், விவசாயத்தில் புத்தாக்கத்திற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

பைசன் போட் டிரக்டரானது, எந்தவொரு வயலுக்கும் ஏற்ற உழவு இயந்திரமாக தனித்து நிற்கிறது. இந்த படகு இயந்திரத்தை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, ஆழமாக உழக் கூடிய அதன் திறன் ஆகும். வழக்கமாக நிலத்தை பண்படுத்தும் முறைகள் மூலம் பண்படுத்த முடியாத சதுப்பு நிலங்களுக்கு ஏற்றதாக இது காணப்படுகிறது.

இந்த புத்தாக்க கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த, DIMO குழுமத்தின் விவசாய இயந்திரப் பிரிவை மேற்பார்வை செய்யும் DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே, “பைசன் போட் டிரக்டரானது, நாட்டில் விவசாய இயந்திரமயமாக்கல் செயற்பாட்டை மேம்படுத்தும் வகையிலான DIMO நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாகும். இந்த சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பானது, விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், நாட்டின் பயிர்ச் செய்கை முறைகளை மீள்வரையறை செய்யும்.” என்றார்.

பைசன் போட் டிரக்டரானது தனித்துவமான அம்சங்களில் ஒன்று, அதன் குறிப்பிடத்தக்க செயற்றிறன் ஆகும். இது ஒரு ஹெக்டயர் நிலத்தை ஒரு மணி நேரத்திற்குள் பண்படுத்தும் திறன் கொண்டது. பைசன் போட் டிரக்டரின் மூலம், விவசாயிகள் நிலத்தை பண்படுத்துவதற்கு எடுக்கும் நேரத்தையும் செலவையும் கணிசமான அளவில் குறைக்க முடியும். வயல் நிலத்தைப் பொறுத்து, விவசாயிகள் இந்த உழவு இயந்திரத்தின் மூலம் 60-70% ஆன நேரத்தைச் சேமிக்கும் அதே வேளையில், நிலத்தை பண்படுத்தும் செலவை 75-90% வரை குறைக்க முடியும். பைசன் போட் டிரக்டர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பைக் குறைக்க முடிகின்ற அதே நேரத்தில், சேற்றுடனான தொடர்பைக் குறைத்து, விவசாயிகள் தங்களது வேலையின் தரத்தை அது மேம்படுத்துகின்றது.

DIMO Agribusinesses அறிமுகப்படுத்தும் பைசன் போட் டிரக்டர், ஒரு ஏக்கருக்கு 5-6 லீற்றர் டீசலை பயன்படுத்தும் எரிபொருள் திறனைக் கொண்டுள்ளது.  இது 22 குதிரை வலு கொண்ட எஞ்சினைக் கொண்டுள்ளது. இதன் மூலம் வயல் நிலத்திற்கு ஏற்ற செயற்றிறனை அது உறுதி செய்கிறது. அத்துடன், பைசன் போட் டிரக்டரின் ஆழமாக பண்படுத்தும் திறன் காரணமாக, மண்ணைப் புரட்டி, சம அளவில் அவை கலப்படையச் செய்து, பயிர் வேர்களுக்கு தேவையான போசணைகளை வழங்க உதவுகிறது. இந்த உழவு இயந்திரம் நெல் வயல் முழுவதும் சீரான மேற்பரப்பு மட்டத்தை பேணுவதன் மூலம் திறனான நீர் முகாமைத்துவத்திற்கு உதவுகிறது. அது மாத்திரமன்றி, ஆழமாக மண்ணை புரட்டி, களைகளின் இருப்பை அழித்து, பயிர்களின் வேர் கட்டமைப்பில் ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

விவசாயத் துறையில் DIMO Agribusinesses இன் அர்ப்பணிப்பானது புத்தாக்கங்களை கடந்ததாகும். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் விற்பனைக்குப் பின்னரான இணையற்ற சேவைகளை நிறுவனம் வழங்குவதன் காரணமாக, விவசாயிகள் பைசன் போட் டிரக்டரை நம்பிக்கையுடன் கொள்வனவு செய்வதை அது உறுதி செய்கிறது. இரண்டு இரும்புச் சக்கரங்கள், ஒரு கலப்பை, ரோலர், பிளக் டிஸ்க் ஆகியவற்றைக் கொண்ட இந்த உழவு இயந்திரத்தின் வடிவமைப்பானது, சேற்று நிலங்களில் சிறப்பாக செயற்படுவதற்கு ஏற்றதாக அமைவதோடு, அதன் பல்துறை செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது.

DIMO Agribusinesses இன் பைசன் போட் டிரக்டரின் அறிமுகமானது, இலங்கையில் விவசாய இயந்திரமயமாக்கலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை காண்பிக்கிறது. சேற்று நிலமாகவோ சாதாரண நிலமாகவோ இருந்தாலும், பரந்த அளவிலான பயிர்ச் செய்கை வயல்களுக்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அது கொண்டுள்ளது. அத்துடன், இது அடுத்த தலைமுறை விவசாயத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான DIMO Agribusinesses இன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

END

Photo Caption : DIMO புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள (Bison) பைசன் போட் டிரக்டர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *