புதிய யுகத்திற்கான டிஜிட்டல் விற்பனைக்காக ‘Smart Sandi’ விற்பனையாளர் செயலியை அறிமுகப்படுத்தும் HUTCH

கையடக்கத் தொலைபேசி மூலமான தகவல்தொடர்பாடல் சேவைகளுக்கான, நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, வழக்கமான சில்லறை வர்த்தகத்தை டிஜிட்டல் சில்லறை விற்பனையின் புதிய யுகமாக மாற்றும் வகையில், தனது Smart Sandi Retailer செயலியை சமீபத்தில் மேம்படுத்தியுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட செயலியின் மூலம், சில்லறை பங்குதாரர்கள் இனிமேல் Hutch யின் புதிய விற்பனைகளை மேற்கொள்ள, போட்டோ பிரதி இயந்திரங்கள் அல்லது ஸ்கேனர்கள் போன்ற விலையுயர்ந்த சாதனங்களை கொள்வனவு செய்ய வேண்டியதில்லை. சில்லறை விற்பனையாளர்கள் இனிமேல் இலத்திரனியல் ரீசார்ஜ்களை மேற்கொள்ள, விலையுயர்ந்த இயந்திரங்களில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. அத்துடன், ரீசார்ஜ் அட்டைகளை கொள்வனவு செய்ய பணத்தை கட்ட வேண்டியதில்லை. தற்போது அதனை உலகளாவிய தனியான டிஜிட்டல் பணப்பை மூலம் கொள்வனவு செய்ய முடியும். விற்பனையின் போது இதனை டிஜிட்டல் தயாரிப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.

குறிப்பாக Smart Sandi Retailer App ஆனது, தற்போதைய சவாலான சூழலில் பல்வேறு செயற்பாட்டு ரீதியான சிரமங்களை சமாளிக்கும் வகையிலான பல்வேறு அம்சங்களுடன் சில்லறை விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் Hutch வாடிக்கையாளர்கள், பலவிதமான புதுமையான, தொழில்துறையில் முதன்முதலான சேவைகளை பெறுகின்றனர்.

இந்த செயலி அறிமுகம் குறித்து Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில், “எமது சில்லறை வர்த்தக பங்காளிகள் மற்றும் பங்குதாரர் வலையமைப்பின் வளர்ச்சி தொடர்பில் நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளோம். அந்த முயற்சியில், டிஜிட்டல் சில்லறை விற்பனையின் புதிய யுகத்தை நோக்கி எமது சில்லறை பங்குதாரர்களுக்கு வழிகாட்டுவதற்காக, எமது புரட்சிகர Smart Sandi Retailer App யினை அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். சிறந்த வசதிகள், பரந்த வருமானம், குறைந்த முதலீடுகள், சிறந்த பணப்புழக்கம் மற்றும் எமது சில்லறை பங்குதாரர்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இச்செயலி வழங்கும். இந்த செயலியானது, சில்லறை விற்பனை விரிவாக்கத்திற்கான புதிய கட்டத்தை எளிதாக்குவதோடு, சிறு வணிகங்கள், அவர்களின் வருமானத்தை விரிவுபடுத்தவும், அதனுடன் இணைந்தவாறு எமது வாடிக்கையாளர்களுக்கான சேவை அணுகலை மேம்படுத்தவும் உதவும்.

Hutch SMART SANDI Retailer App ஆனது, பரவலாக காணப்படும் அன்ட்ரொய்ட் இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது எந்தவொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் பயன்படுத்த ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *