Riyelta மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான பேட்டரிகள் தற்போது சிங்கர் விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில், நாட்டில் முன்னணி வகித்து வருகின்ற சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி, இலங்கையில் Riyelta பேட்டரிகளுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயல்படுவதற்காக Leader நிறுவனங்கள் குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட தயாரிப்பு வரிசையானது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் ஆகிய இரண்டிற்கானவற்றையும் வழங்குகிறது.

அதிநவீன ஜேர்மனிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் தயாரிக்கப்படும் இந்த பேட்டரிகள், இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஐரோப்பிய உயர்தர சந்தை பேட்டரிகளை, கட்டுபடியான விலையில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன், பேட்டரிகள் வெகு விரைவில் மோட்டார் கார்களுக்கும் கிடைக்கவுள்ளன. Riyelta உயர் தொழில்நுட்ப பேட்டரிகள், நீண்ட கால உத்தரவாதத்துடன், சிங்கர் ஸ்ரீலங்காவின் ஆதரவுடன், உள்நாட்டு பேட்டரி துறையில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Riyelta உயர் தொழில்நுட்ப பேட்டரிகள் ஒரு தலைசிறந்த பண்புடன் தம்மை ஏனையவற்றிலிருந்து தனித்துவமாக வேறுபடுத்திக் கொள்கின்றன: அதிநவீன SilverCell தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு, ஜேர்மனிய விஞ்ஞானிகளின் முன்னோடி தயாரிப்பாக உள்ளன. இந்த தொழில்நுட்பம் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வெள்ளி அடிப்படையிலான கலவையைப் பயன்படுத்துகிறது. இது நீர் இழப்பு மற்றும் பேட்டரியின் கல அரிப்பை திறம்பட தடுக்கிறது. அத்துடன், பேட்டரிக்குள் துல்லியமான வெப்பநிலை ஒழுங்குமுறை மூலம் மூலப்பொருள் ஒருமைப்பாட்டை உறுதி செய்கிறது. இந்த பேட்டரிகள் அவற்றின் தர நியமங்களுக்காக ISO 9001 சான்று அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.

சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான மகேஷ் விஜேவர்தன அவர்கள் கருத்து வெளியிடுகையில், ‘பாரிய வாடிக்கையாளர் தளத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்து, இலங்கை சந்தையில் Riyelta தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் குடிமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, கட்டுபடியான தெரிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. Riyelta மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தர அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் கட்டுபடியான விலையில் உயர்தர மாற்றீட்டை எம்மால் வழங்க முடியும்,” என்று குறிப்பிட்டார்.  

இந்த பேட்டரிகளின் அங்கீகாரம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, இலங்கையின் சொந்த மைந்தனான டிலாந்த மலகமுவ உட்பட உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் பந்தய வீரர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. டிலந்த அவர்கள், Leader குழுமத்துடன் இணைந்து, அதிநவீன ஜேர்மனிய பேட்டரி உற்பத்தி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், உலக மற்றும் உள்நாட்டு அரங்கில் Riyelta வர்த்தகநாமத்தை சிறப்பாக ஸ்தாபிக்கவும் இணைந்துள்ளது.

Leader குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், ‘இந்த கூட்டாண்மைக்காக சிங்கர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். Riyelta பேட்டரிகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன என்பதுடன் மற்றும் மோட்டார் பந்தயத் துறையில் புகழ்பெற்ற நபர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எங்கள் அனுகூலமானது இந்த பேட்டரிகளின் உள்நாட்டு உற்பத்தியில் தங்கியுள்ளதுடன், இது கட்டுபடியான விலையில் அவற்றை வழங்க எமக்கு இடமளிக்கிறது. இந்த தலைசிறந்த தயாரிப்புகளை சிங்கர் மூலம் இலங்கையின் பரந்த சமூகத்திற்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 40 சிங்கர் விற்பனை நிலையங்களில் தற்போது இந்த பேட்டரிகள் கிடைக்கும். பேட்டரிகள் கிடைக்கும் பகுதிகளில் பேட்டரி இயங்குநிலை சோதனை முகாம்களை நடத்துவதோடு, உயர் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் அறிவு பகிர்வு அமர்வுகளையும் சிங்கர் நடத்தும். சிங்கர் மூலம் வாங்கப்படும் அனைத்து Riyelta பேட்டரிகளும் ஒரு வருட உற்பத்தியாளர் உத்தரவாதத்துடன் கிடைக்கப்பெறுவதுடன், மேலும் வட்டியில்லா வாடகைக் கொள்வனவுத் திட்டத்தின் கீழும் வாங்கலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *