உலகளாவிய UPS தீர்வுகளுக்கான முன்னணி நிறுவனத்துடன் இணைந்து Energynet கூட்டாளர் ஒன்றுகூடலில் புதிய UPS தயாரிப்புகள் வெளியீடு
Hayleys Fentons இன் துணை நிறுவனமான Hayleys Energynet, சக்தி செயற்திறன் கொண்ட UPS தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான இத்தாலியின் Riello UPS உடன் இணைந்து, கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி அதன் புதிய Riello Master HE UPS தொடரை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக வளர்ந்து வரும் மின்சக்தி துறையில், புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்தை செயற்படுத்துவதில் கூட்டாண்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. Riello Master HE 800 KVA UPS தொகுதியின் அறிமுகமானது, Energynet Partners Meet (Energynet கூட்டாளர்கள் சந்திப்பு) இன் முக்கிய அம்சமாக அமைந்தது. இது தொழில் வல்லுநர்கள், பொறியியலாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்திருந்தது.
இலங்கையில் Riello UPS இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை பங்காளியாக Hayleys Energynet சேவையாற்றுகிறது. நிறுவனத்தின் UPS தயாரிப்புகளுடன் இணைந்தவாறு, Riello UPS தொகுதியானது இலங்கையில் ஒரு முன்னோடியான தீர்வாக அமைகிறது. அது கொண்டுள்ள உயர் மின்னழுத்த வழங்கல் உடன், ஒப்பற்ற சக்தி தரம், உச்சபட்ச பாதுகாப்பு, மேம்பட்ட செயற்றிறனையும் அது உறுதி செய்கிறது.
Fentons Limited நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது Hayleys Energynet தயாரிப்புகளுக்கான எதிர்காலம் மிக நம்பிக்கைக்குரியதாக காணப்படுகின்றது. Riello UPS உடனான எமது புதிய கூட்டாண்மை மூலம், பாதுகாப்பான மற்றும் நிலைபேறான பணிச் செயன்முறைக்கான இடர் நேர மின்சக்தியை வழங்குவதன் மூலம் எதிர்காலத்திற்கான மின்சக்தி தொடர்பில் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்
இரு நிறுவனங்களுக்கிடையிலுமான சாத்தியமான ஒத்துழைப்புகளைப் பற்றி கலந்துரையாடவும் பிணைப்பை வலுப்படுத்தவும் RPS S.P.A நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் Stefano Sinigallia இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வின் போது, ஸ்டெபானோ சினிகல்லியவினால் திறந்துவைக்கப்பட்ட பாரிய UPS இனை பார்வையிடும் வாய்ப்பையும் பங்கேற்பாளர்கள் பெற்றனர்.
சினிகல்லிய இங்கு தெரிவிக்கையில், “ஒப்பற்ற உயர் வளர்ச்சி விகிதத்துடன், ஆசிய சந்தை எமக்கு ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. எமது மதிப்புமிக்க பங்காளியான Hayleys Energynet மூலம், எமது சமீபத்திய UPS உற்பத்திகளை சந்தைக்கு வழங்குவதற்கான ஆதரவை நாம் பெறுகிறோம். குறிப்பாக தொழில் வல்லுநர்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.” என்றார்.
Hayleys Energynet இன் பொறியியல் விற்பனைப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் மகேஷ் அபேவிக்ரம தெரிவிக்கையில், “Riello Master HE UPS தொடரானது, அதிக திறன் மற்றும் உச்சபட்ச மின்சக்தியை வழங்குகின்றது. பெரிய அளவிலான வணிக நடவடிக்கைகளுக்கு ஏற்ற நிறுவல்களுக்கு ஏற்றதாக இவை உள்ளன. இந்தத் தொடரானது, தரவு மையங்கள் மற்றும் தொழில்துறை மின்சக்தி தேவைகளுக்கான உச்சபட்ச பாதுகாப்பு மற்றும் மின்சக்தி தரத்தை உறுதி செய்கின்றன. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், எமது UPS தயாரிப்புகள் வணிகங்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான சக்திவாய்ந்த பெறுமதி சேர் அம்சமாக அமையும்.” என்றார்.
Hayleys Energynet பற்றி
இலங்கையின் மின்சக்தி துறையில் நம்பகமான பெயராக Hayleys Energynet திகழ்கின்றது. இது வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு புத்தாக்கமான மற்றும் நம்பகமான மின்சக்தி தீர்வுகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளது. இலங்கையில் நிறுவப்பட்ட மிகப் பழமையான பொறியியல் நிறுவனமான Hayleys Fentons இன் துணை நிறுவனமான Hayleys Energynet ஆனது, 35 வருட UPS சந்தைத் தலைமைத்துவ ஆதரவுடன் ஒரு சிறந்த சேவை கட்டமைப்பின் மூலம் இடர் நேர மின்சக்தியை வழங்குகிறது. இந்நிறுவனம் இன்று வரை 18,000 இற்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. சுகாதாரம், வங்கி, பொது உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசியப் பயன்பாடுகள் உள்ளிட்ட முக்கியமான சேவைகளில் இது நேரடியாக பங்கு வகிப்பதன் மூலம், வணிகங்கள் மற்றும் சமூகங்கள் ஆகிய இரண்டையும் வளப்படுத்துகிறது.